• May 19 2024

400 இடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்.. !இடைநிறுத்தம் முடிந்த 2 நாட்களில் 200 பேர் பலி! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 9:21 am
image

Advertisement

இஸ்ரேல் காசாமீது தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போத லெபனான் எல்லையிலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த அடிப்படையில் இஸ்ரேலிய இராணுவத்தின் யுத்த டாங்கிகள் எரியும் காணாளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலினால் இடம்பெற்றிருக்காலம் என்ற கூறப்படுகின்றது.

இந்நிலையில் லெபான் பகுதி காசா போன்று மாறும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக தமது எல்லைக்குள் நடத்தும் ஹிஸ்புல்லா அமைப்பை கட்டுப்படுத்தவேண்டும் அவர்கள் அத்துமீறுவது அதிகரித்துள்ளது.

இது லெபனானுக்க பாடம் கற்பிக்க இஸ்ரேலை தூண்டும் என இ்ஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.

கைதிகளை மீட்டெடுக்கும் மற்றும் ஹமாஸை ஒழிக்கும் எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை போர் தொடரும். மேற்கூறிய இலக்குகளை அடைய தரை செயல்பாடு அவசியம் எனவும் 

சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி ராணுவ வீரர்கள் போராடுவதாக நெதன்யாகு கூறினார். "

இது ஒரு நீண்ட கால போர், ஆனால் நாள் முடிவில் இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவோம்," என்றும்  கூறிய  அவர் ஹமாஸுக்கு எதிரான முழுமையான வெற்றிக்காக எங்கள் வீரர்கள் போர்நிறுத்த நாட்களில் தயாராகிவிட்டனர்."

இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் கைதிகளை விடுவிக்க உதவியது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். 

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து காசாவில் 400 இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதில்  இதுவரை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும்தாக்குதலை தொடங்கியுள்ளது.

போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து  இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது.அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர்.

காசாவில் இஸ்ரேல் படையினர் -ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது.

போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று  அதிகாலை டமாஸ்கஸின் புறநகரில் பல இடங்கள் மீது  இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரிய கோலன் குன்றுகளின் திசையில் இருந்து தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும், காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 400க்கும் மேற்பட்ட பயங்கரவாத இடங்களை குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இஸ்ரேலிய தாக்குதல்களால் கிட்டத்தட்ட 200 பேர் பலியாகியுள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக உதவித் தொடரணிகளை கொண்டு வர வேண்டாம் என்று இஸ்ரேல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம்  கூறியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

நாங்கள் ஹமாஸை தோற்கடிக்கவில்லை, ஏனெனில் அது காசா பகுதியைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, இன்னும் நம்மை நோக்கி ராக்கெட்டுகளை  வீசுகிறது என இஸ்ரேலிய பிரதமரின் ஆலோசகர் மார்க் ரெகேவ் கூறுகின்றார்.

காசா போரை நிறுத்துவதிலும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதையும் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது எனவும் இஸ்ரேலுக்கு எதிராக முற்றிலும் எவ்வித ஆற்றலும் இல்லாத அமைப்பாக ஐ.நா. மாறிவிட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

400 இடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல். இடைநிறுத்தம் முடிந்த 2 நாட்களில் 200 பேர் பலி samugammedia இஸ்ரேல் காசாமீது தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில் தற்போத லெபனான் எல்லையிலும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த அடிப்படையில் இஸ்ரேலிய இராணுவத்தின் யுத்த டாங்கிகள் எரியும் காணாளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் இது ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதலினால் இடம்பெற்றிருக்காலம் என்ற கூறப்படுகின்றது.இந்நிலையில் லெபான் பகுதி காசா போன்று மாறும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக தமது எல்லைக்குள் நடத்தும் ஹிஸ்புல்லா அமைப்பை கட்டுப்படுத்தவேண்டும் அவர்கள் அத்துமீறுவது அதிகரித்துள்ளது.இது லெபனானுக்க பாடம் கற்பிக்க இஸ்ரேலை தூண்டும் என இ்ஸ்ரேல் பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது.கைதிகளை மீட்டெடுக்கும் மற்றும் ஹமாஸை ஒழிக்கும் எங்கள் எல்லா இலக்குகளையும் அடையும் வரை போர் தொடரும். மேற்கூறிய இலக்குகளை அடைய தரை செயல்பாடு அவசியம் எனவும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படி ராணுவ வீரர்கள் போராடுவதாக நெதன்யாகு கூறினார். "இது ஒரு நீண்ட கால போர், ஆனால் நாள் முடிவில் இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவோம்," என்றும்  கூறிய  அவர் ஹமாஸுக்கு எதிரான முழுமையான வெற்றிக்காக எங்கள் வீரர்கள் போர்நிறுத்த நாட்களில் தயாராகிவிட்டனர்."இராணுவ அழுத்தம் மற்றும் இராஜதந்திர முயற்சிகள் கைதிகளை விடுவிக்க உதவியது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து காசாவில் 400 இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதில்  இதுவரை 240 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும்தாக்குதலை தொடங்கியுள்ளது.போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து  இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது.அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர்.காசாவில் இஸ்ரேல் படையினர் -ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது.போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 240 பேர் பலியாகி உள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.நேற்று  அதிகாலை டமாஸ்கஸின் புறநகரில் பல இடங்கள் மீது  இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரிய கோலன் குன்றுகளின் திசையில் இருந்து தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது.மேலும், காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 400க்கும் மேற்பட்ட பயங்கரவாத இடங்களை குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.இதேவேளை இஸ்ரேலிய தாக்குதல்களால் கிட்டத்தட்ட 200 பேர் பலியாகியுள்ளதாக காசாவின் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையிலான போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை முடிவடைந்த பின்னர், எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக உதவித் தொடரணிகளை கொண்டு வர வேண்டாம் என்று இஸ்ரேல் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம்  கூறியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.நாங்கள் ஹமாஸை தோற்கடிக்கவில்லை, ஏனெனில் அது காசா பகுதியைக் கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கிறது, இன்னும் நம்மை நோக்கி ராக்கெட்டுகளை  வீசுகிறது என இஸ்ரேலிய பிரதமரின் ஆலோசகர் மார்க் ரெகேவ் கூறுகின்றார்.காசா போரை நிறுத்துவதிலும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்படுவதையும் தடுக்க ஐ.நா. தவறிவிட்டது எனவும் இஸ்ரேலுக்கு எதிராக முற்றிலும் எவ்வித ஆற்றலும் இல்லாத அமைப்பாக ஐ.நா. மாறிவிட்டது எனவும் வேதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement