• Apr 02 2025

லெபனானில் படுகாயமடைந்த இலங்கைப் படைவீரர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இஸ்ரேல் உறுதி!

Tamil nila / Oct 12th 2024, 10:14 pm
image

லெபனானில் இரு இலங்கையர்கள் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளதாக டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இரு இலங்கை அமைதி காக்கும் படையினர் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலில் காயமடைந்தமை தொடர்பில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தூதர் ஹகாய் டிகான் கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய அரசாங்கம் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது கிடைக்கப்பெறும் போது மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

லெபனானில் படுகாயமடைந்த இலங்கைப் படைவீரர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள இஸ்ரேல் உறுதி லெபனானில் இரு இலங்கையர்கள் காயமடைந்தமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு உறுதியளித்துள்ளதாக டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தெற்கு லெபனானில் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையில் பணியாற்றும் இரு இலங்கை அமைதி காக்கும் படையினர் இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதலில் காயமடைந்தமை தொடர்பில் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சின் ஆசிய பசுபிக் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தூதர் ஹகாய் டிகான் கவலை தெரிவித்துள்ளார்.இஸ்ரேலிய அரசாங்கம் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அது கிடைக்கப்பெறும் போது மேலதிக தகவல்களை வழங்குவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement