• Sep 20 2024

தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க முடிவு..! samugammedia

Chithra / May 3rd 2023, 5:40 pm
image

Advertisement

சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக விகாரை முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க முடிவு. samugammedia சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி விகாரையை அகற்றுமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) வரை இந்த போராட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ், வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பேரணியாக நகர்ந்து தையிட்டி விகாரை வரை சென்று விகாரைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.14 குடும்பங்களுக்கு சொந்தமான அண்ணளவாக 100 பரப்பு காணியை விடுவிக்க கோரியும் சட்டவிரோதமாக கட்டப்பட்ட பௌத்தக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும் பௌத்தமயமாக்கல் திணிப்பை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டம் காரணமாக விகாரை முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

Advertisement