• Nov 23 2024

உள்ளூராட்சி மன்ற வாகனங்களை முன்னாள் தவிசாளர்களுக்கு வழங்குவது சட்ட விரோதமானது...! கபே அமைப்பு சுட்டிக்காட்டு...!

Sharmi / Jul 5th 2024, 12:25 pm
image

கிழக்கு,  மத்திய மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் மூலமாக  உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றிய முன்னாள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு  ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவியை வழங்கி அதனூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களை பாவிப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் ஊடாக  தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அரச சொத்து துஷ்பியோகக்கப்படுவது  தொடர்பில் கபே தேர்தல் கண் காணிப்பு அமைப்பின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்கள் கண்டிக்கத்தக்கது என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

உள்ளூராட்சி மன்றத் தேர்தல், வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல்  தினம் குறிப்பிடப்படாமல் வரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில்  இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவது, அதேபோன்று அதன் ஊடாக அரச சொத்துக்கள் பாவிக்கப்படுவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்பதையும் குறித்த கடிதத்தின் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளூராட்சி மன்ற செயலாளர் வசமே காணப்படுவதனால்,  இவ்வாறு அரச சொத்து துஷ்பிரயோகத்துக்கு துணை போகக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


உள்ளூராட்சி மன்ற வாகனங்களை முன்னாள் தவிசாளர்களுக்கு வழங்குவது சட்ட விரோதமானது. கபே அமைப்பு சுட்டிக்காட்டு. கிழக்கு,  மத்திய மற்றும் தென் மாகாண ஆளுநர்கள் மூலமாக  உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றிய முன்னாள் நகர முதல்வர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு  ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக இணைப்பாளர்கள் பதவியை வழங்கி அதனூடாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்களை பாவிப்பதற்குரிய அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் ஊடாக  தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அரச சொத்து துஷ்பியோகக்கப்படுவது  தொடர்பில் கபே தேர்தல் கண் காணிப்பு அமைப்பின் ஊடாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் கண்டிக்கத்தக்கது என கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீன் தெரிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,உள்ளூராட்சி மன்றத் தேர்தல், வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல்  தினம் குறிப்பிடப்படாமல் வரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கக்கூடிய சந்தர்ப்பத்தில்  இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவது, அதேபோன்று அதன் ஊடாக அரச சொத்துக்கள் பாவிக்கப்படுவது தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறுகின்ற செயற்பாடாகும் என்பதையும் குறித்த கடிதத்தின் ஊடாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் உள்ளூராட்சி மன்ற செயலாளர் வசமே காணப்படுவதனால்,  இவ்வாறு அரச சொத்து துஷ்பிரயோகத்துக்கு துணை போகக்கூடிய அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் குறித்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement