தமிழீழ விடுதலை புலிகள் மீதான நிலைப்பாட்டை அரசியல் சூழ்நிலைக்கேற்ப தமிழக அரசு அதனை மாற்ற வேண்டியது அவசியமானதாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆகஸ்ட் 26 ந் திகதி முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு தொலைநகல் மூலமாக அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து இக் கடிதத்தை வரைகிறேன்.
தமிழீழ விடுதலைப்புலிகளை இந்திய ஒன்றிய அரசு சட்டவிரோதமாக அறிவித்துள்ளது தொடர்பாக ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு ) நடுவர் மன்றம் சென்னையில் செப்டம்பர் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் விசாரணை நடத்தவிருப்பதாக தமிழக அரசினால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்திய ஒன்றிய அரசின் பரிந்துரையில், டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் சட்ட விரோத தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தில் (UNLAWFUL ACTIVITIES (PREVENTION) TRIBUNAL) நடைபெறும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து இக் கடிதத்தை எழுதுகின்றேன்.
கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி இந்திய ஒன்றிய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடிக்க பரிந்துரைத்துள்ளது. அதனை மேற்கூறிய தீர்ப்பாயத்தின் ஊடாக உறுதி செய்யும் வழக்கில், தமிழ்நாடு அரசின் பங்கு (Sponsoring Authority). மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம்.
மலையகத் தமிழர்களின் 200 ஆண்டு அவல வாழ்க்கை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்நாட்டில் மகாநாடு நடத்த அனுமதி கோரிய போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அனுமதி வழங்குவது இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில், பிற நாடுகளுடன் இந்தியாவின் வெளிவிவகார உறவுகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களை பரிசீலிக்குமாறும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (தமிழீழ விடுதலைப் புலிகளும்) தமிழீழம் அமைக்கும் அரசியல் கோரிக்கையை கொண்டதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்ற அமைப்பு என்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருப்பவர்கள் என்றும், அவர்களுடைய நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையுடன் அவர்களுக்கு உள்ள நெருக்கத்தை (affinity ) பறை சாற்றுபவர்கள் என்பதாலும் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
ஆயினும், சென்னை உயர்நீதிமன்றம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மகாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சென்னையில் நடை பெற்ற போது தமிழ்நாடு காவல்துறை அதனை தடுத்து அதில் கலந்து கொண்டவர்களை தடுத்து வைத்தது. அதற்கான காரணத்தை இதுவரை தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தரவில்லை. அதற்கான நியாயமான காரணம் இருப்பதாக நாம் கருதவும் இல்லை.
2019 ம் ஆண்டும், தற்போதும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக போடப்பட்ட தடை இந்திய சட்டத்திற்கும் சர்வதேச சட்டங்களுக்கும் முரணானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட முனைந்தபோது, தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் மட்டுமே வழக்கில் ஈடுபடலாம் எனக்கூறி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.
சட்டவிரோத தடுப்புச் சட்டத்தீர்ப்பாயத்தின் செயற்பாடுகள், ஒன்றிய அரசினதும், தமிழக அரசினதும் அரசியல் முடிவுகளுக்கு சட்ட அங்கீகார முலாம் பூசும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
இன்று உலகில் சிறிலங்கா, இந்தியா, மலேசியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையின் அடிப்படையிலேயே தமிழீழ மக்களின் விடுதலை அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடைக்கு எதிராக மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக ஜூன் மாதம்21 ஆம் திகதி, 2024 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி தொடர்பான அலுவலகம் (Foreign, Common Wealth, and Development Office), தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடையை நீக்குவது, இந்தியாவுடனான பிரித்தானியாவின் உறவை பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தது. மற்றைய நாடுகளும் புலிகளுக்கு எதிராக தடையிட்டிருப்பதற்கு,இந்தியாவில் புலிகள்மீதான தடையே முக்கிய காரணம் என்பதே உண்மையாகும். எனவே இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதே சிறிலங்கா தீவில் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு முக்கியமானதென நாம் கருதுகின்றோம்.
இந்தியாவின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையைப் பயன்படுத்தியே, சிறிலங்கா உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் மக்களின் நீதியான அமைதியான போராட்டத்திற்கு பயங்கரவாத முலாம் பூசி நசுக்க முற்பட்டு வருகின்றது. மேலும் 2009ல் நடைபெற்ற இனப்படுகொலைக்கான நீதி கோரும் எவ்வகையான நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசின் இத்தடை முட்டுக்கட்டையாக இருக்கிறது.
இந்திய ஒன்றிய அரசினால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது யாதெனில் தமிழீழம் என்பது தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து, இந்தியாவின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதேயாகும். அதற்கு சான்றாக 1980களில் வெளிவந்த தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு சற்றும் தொடர்பற்ற ஒரு வரைபடத்தை (தமிழ்நாடு தமிழீழம் படம்) ஆதாரமாய் காட்டி, தடையை நீடிப்பது ஒரு கற்பனா வாதம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். மேலும் அதுபோன்றதொரு நோக்கம் தமிழீழ விடுதலையை முன்னெடுக்கும் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சனம். அதுபோல் 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்துவிட்டதாக அறிவித்த, 2009 இல் இருந்து இன்று வரை தமிழீழப்போராட்டம் சார்ந்து எந்த ஒரு வன்முறையும் இடம்பெறவில்லை என்பதே உண்மை நிலை. தனிப்பட்ட நபர்களின் குற்ற நடவடிக்கையை ஒரு அமைப்பின் நடவடிக்கையாக கட்டமைப்பதும், அதனைக் காரணம் காட்டி ஒரு விடுதலை போராட்டத்தை நீர்த்துப்போக செய்வதும் நியாயமற்றது. மேலும் தனி நபரின் செயலை தலைமைப் பீடம் அதனை ஆதரிக்காவிடில், அந்த நடவடிக்கையை அமைப்பின் நடவடிக்கையாக கருதமுடியாது என அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று பங்களாதேசில் உள்ள BNP கட்சி ஆதரவாளர் தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது. Uddinv AttyGeneral U .S . 870F .3d 282 (3rd Cir 2017). மேற்கூறிய வழக்கும் அதன் கூற்றுகளும் முழுமையாக தமிழீழ விடுதலை புலிகளின் தடைக்கான காரணங்களோடு முழுமையாகப் பொருந்துகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பான தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு நீதியற்ற இந்த தடையை உறுதிப்படுத்தும் வகையில் ஆவனங்களை சமர்ப்பித்து ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஈழத்தமிழருக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் இனப்படுகொலையின் நீதிக்குமான போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு எம்முடன் தோளோடு தோள் கொடுத்து, தார்மீக, அரசியல், சட்ட ஆதரவு தரவேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகும். மேலும் 1991 ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள்மீது இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழக அரசு, 2009க்கு பின்பான அரசியல் சூழ்நிலைக்கேற்ப அதனை மாற்ற வேண்டியது அவசியமானதாகும்.
இச்சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் U/S. 4 (3) OF THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 1967 சட்டத்தின் கீழ் மேற்கூறிய தீர்ப்பாயத்தில் எடுக்கும் சட்டநடவடிக்கையின் நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைமாற்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்று நிலைப்பாட்டை எடுக்க முடியும் என நம்புகிறோம். மேலும் தெற்காசியப் பிராந்தியத்தில் தமிழர் இறையாண்மையை காக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசிற்குண்டென்கிற உரிமையிலேயே இந்த கோரிக்கையானது விடுக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம்.
இது தொடர்பாக மேலதிக விவரங்கள் தேவையாயின் உரிய சட்ட ஆவணங்களையும், தரவுகளையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீதான நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்ற வேண்டியது அவசியம்-நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்து. தமிழீழ விடுதலை புலிகள் மீதான நிலைப்பாட்டை அரசியல் சூழ்நிலைக்கேற்ப தமிழக அரசு அதனை மாற்ற வேண்டியது அவசியமானதாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,ஆகஸ்ட் 26 ந் திகதி முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு தொலைநகல் மூலமாக அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து இக் கடிதத்தை வரைகிறேன்.தமிழீழ விடுதலைப்புலிகளை இந்திய ஒன்றிய அரசு சட்டவிரோதமாக அறிவித்துள்ளது தொடர்பாக ஒன்றிய அரசினால் அமைக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு ) நடுவர் மன்றம் சென்னையில் செப்டம்பர் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் விசாரணை நடத்தவிருப்பதாக தமிழக அரசினால் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பு எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.இந்திய ஒன்றிய அரசின் பரிந்துரையில், டெல்லி உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் சட்ட விரோத தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தில் (UNLAWFUL ACTIVITIES (PREVENTION) TRIBUNAL) நடைபெறும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு குறித்து இக் கடிதத்தை எழுதுகின்றேன். கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி இந்திய ஒன்றிய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடிக்க பரிந்துரைத்துள்ளது. அதனை மேற்கூறிய தீர்ப்பாயத்தின் ஊடாக உறுதி செய்யும் வழக்கில், தமிழ்நாடு அரசின் பங்கு (Sponsoring Authority). மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் அறிவோம். மலையகத் தமிழர்களின் 200 ஆண்டு அவல வாழ்க்கை தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழ்நாட்டில் மகாநாடு நடத்த அனுமதி கோரிய போது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அனுமதி வழங்குவது இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில், பிற நாடுகளுடன் இந்தியாவின் வெளிவிவகார உறவுகளில் ஏற்படக்கூடிய தாக்கங்களை பரிசீலிக்குமாறும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (தமிழீழ விடுதலைப் புலிகளும்) தமிழீழம் அமைக்கும் அரசியல் கோரிக்கையை கொண்டதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுகின்ற அமைப்பு என்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத் தலைவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்திருப்பவர்கள் என்றும், அவர்களுடைய நிகழ்வுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையுடன் அவர்களுக்கு உள்ள நெருக்கத்தை (affinity ) பறை சாற்றுபவர்கள் என்பதாலும் அனுமதி மறுக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். ஆயினும், சென்னை உயர்நீதிமன்றம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மகாநாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது. 2022 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சென்னையில் நடை பெற்ற போது தமிழ்நாடு காவல்துறை அதனை தடுத்து அதில் கலந்து கொண்டவர்களை தடுத்து வைத்தது. அதற்கான காரணத்தை இதுவரை தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தரவில்லை. அதற்கான நியாயமான காரணம் இருப்பதாக நாம் கருதவும் இல்லை.2019 ம் ஆண்டும், தற்போதும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக போடப்பட்ட தடை இந்திய சட்டத்திற்கும் சர்வதேச சட்டங்களுக்கும் முரணானது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட முனைந்தபோது, தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் மட்டுமே வழக்கில் ஈடுபடலாம் எனக்கூறி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.சட்டவிரோத தடுப்புச் சட்டத்தீர்ப்பாயத்தின் செயற்பாடுகள், ஒன்றிய அரசினதும், தமிழக அரசினதும் அரசியல் முடிவுகளுக்கு சட்ட அங்கீகார முலாம் பூசும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.இன்று உலகில் சிறிலங்கா, இந்தியா, மலேசியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் மட்டுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையின் அடிப்படையிலேயே தமிழீழ மக்களின் விடுதலை அரசியல் தீர்மானிக்கப்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடைக்கு எதிராக மேற்கொண்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக ஜூன் மாதம்21 ஆம் திகதி, 2024 அன்று தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி தொடர்பான அலுவலகம் (Foreign, Common Wealth, and Development Office), தமிழீழ விடுதலைப் புலிகள்மீதான தடையை நீக்குவது, இந்தியாவுடனான பிரித்தானியாவின் உறவை பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தது. மற்றைய நாடுகளும் புலிகளுக்கு எதிராக தடையிட்டிருப்பதற்கு,இந்தியாவில் புலிகள்மீதான தடையே முக்கிய காரணம் என்பதே உண்மையாகும். எனவே இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீக்குவதே சிறிலங்கா தீவில் ஈழத்தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கு முக்கியமானதென நாம் கருதுகின்றோம்.இந்தியாவின் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையைப் பயன்படுத்தியே, சிறிலங்கா உலகளாவிய ரீதியில் ஈழத்தமிழ் மக்களின் நீதியான அமைதியான போராட்டத்திற்கு பயங்கரவாத முலாம் பூசி நசுக்க முற்பட்டு வருகின்றது. மேலும் 2009ல் நடைபெற்ற இனப்படுகொலைக்கான நீதி கோரும் எவ்வகையான நடவடிக்கைகளுக்கும் ஒன்றிய அரசின் இத்தடை முட்டுக்கட்டையாக இருக்கிறது.இந்திய ஒன்றிய அரசினால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது யாதெனில் தமிழீழம் என்பது தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து, இந்தியாவின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதேயாகும். அதற்கு சான்றாக 1980களில் வெளிவந்த தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு சற்றும் தொடர்பற்ற ஒரு வரைபடத்தை (தமிழ்நாடு தமிழீழம் படம்) ஆதாரமாய் காட்டி, தடையை நீடிப்பது ஒரு கற்பனா வாதம் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும். மேலும் அதுபோன்றதொரு நோக்கம் தமிழீழ விடுதலையை முன்னெடுக்கும் யாருக்கும் இல்லை என்பதே நிதர்சனம். அதுபோல் 2009 மே மாதத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனித்துவிட்டதாக அறிவித்த, 2009 இல் இருந்து இன்று வரை தமிழீழப்போராட்டம் சார்ந்து எந்த ஒரு வன்முறையும் இடம்பெறவில்லை என்பதே உண்மை நிலை. தனிப்பட்ட நபர்களின் குற்ற நடவடிக்கையை ஒரு அமைப்பின் நடவடிக்கையாக கட்டமைப்பதும், அதனைக் காரணம் காட்டி ஒரு விடுதலை போராட்டத்தை நீர்த்துப்போக செய்வதும் நியாயமற்றது. மேலும் தனி நபரின் செயலை தலைமைப் பீடம் அதனை ஆதரிக்காவிடில், அந்த நடவடிக்கையை அமைப்பின் நடவடிக்கையாக கருதமுடியாது என அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று பங்களாதேசில் உள்ள BNP கட்சி ஆதரவாளர் தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்திருந்தது. Uddinv AttyGeneral U .S . 870F .3d 282 (3rd Cir 2017). மேற்கூறிய வழக்கும் அதன் கூற்றுகளும் முழுமையாக தமிழீழ விடுதலை புலிகளின் தடைக்கான காரணங்களோடு முழுமையாகப் பொருந்துகின்றன.தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை தொடர்பான தீர்ப்பாயத்தின் சட்ட நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு நீதியற்ற இந்த தடையை உறுதிப்படுத்தும் வகையில் ஆவனங்களை சமர்ப்பித்து ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஈழத்தமிழருக்கு மிகுந்த வேதனையை தருகின்றது. ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கும் இனப்படுகொலையின் நீதிக்குமான போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு எம்முடன் தோளோடு தோள் கொடுத்து, தார்மீக, அரசியல், சட்ட ஆதரவு தரவேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் கோரிக்கையாகும். மேலும் 1991 ஆம் ஆண்டில் இருந்து தமிழீழ விடுதலை புலிகள்மீது இவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் தமிழக அரசு, 2009க்கு பின்பான அரசியல் சூழ்நிலைக்கேற்ப அதனை மாற்ற வேண்டியது அவசியமானதாகும்.இச்சூழலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டத்தரணிகள் U/S. 4 (3) OF THE UNLAWFUL ACTIVITIES (PREVENTION) ACT, 1967 சட்டத்தின் கீழ் மேற்கூறிய தீர்ப்பாயத்தில் எடுக்கும் சட்டநடவடிக்கையின் நியாயத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டைமாற்றி, தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்படவேண்டும் என்று நிலைப்பாட்டை எடுக்க முடியும் என நம்புகிறோம். மேலும் தெற்காசியப் பிராந்தியத்தில் தமிழர் இறையாண்மையை காக்கும் பொறுப்பும் கடமையும் தமிழ்நாடு அரசிற்குண்டென்கிற உரிமையிலேயே இந்த கோரிக்கையானது விடுக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறோம். இது தொடர்பாக மேலதிக விவரங்கள் தேவையாயின் உரிய சட்ட ஆவணங்களையும், தரவுகளையும் தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.