தமிழரசுக்கட்சியின் யாழ்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இன்று அறிவித்தது.
எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களை இறுதிசெய்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது.
அதன் தீர்மானங்களின் படி யாழ்மற்றும்கிளிநொச்சிமாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களானசிவஞானம் சிறிதரன், எம்.எ. சுமந்திரன் எஸ்சி.சி.இளங்கோவன், கேசவன்சயந்தன்,சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் அர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன்,தியாகராயாபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,கட்சியின் இளைஞரணிதலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன், முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மட்டக்களப்பு மாவட்டக்கிளையுடன் கலந்துரையாடி இறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதேவேளை வன்னித்தேர்தல் மாவட்டம், திருகோணமலை,அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் இதுவரை தமிழரசுக்கட்சியூடாக போட்டியிடும் வேட்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை குறித்த நியமனக்குழு கூடி அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்- வன்னியில் இழுபறி நிலை தமிழரசுக்கட்சியின் யாழ்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தமிழரசுக் கட்சியின் நியமனக்குழு இன்று அறிவித்தது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களை இறுதிசெய்வதற்கான நியமனக்குழு வவுனியாவில் இன்று கூடியது. அதன் தீர்மானங்களின் படி யாழ்மற்றும்கிளிநொச்சிமாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களானசிவஞானம் சிறிதரன், எம்.எ. சுமந்திரன் எஸ்சி.சி.இளங்கோவன், கேசவன்சயந்தன்,சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இமானுவல் அர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன்,தியாகராயாபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன்,கட்சியின் இளைஞரணிதலைவர் கிருஸ்ணப்பிள்ளை சேயோன், முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன், வைத்தியர் சிறிநாத் ஆகியோர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மட்டக்களப்பு மாவட்டக்கிளையுடன் கலந்துரையாடி இறுதிசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வன்னித்தேர்தல் மாவட்டம், திருகோணமலை,அம்பாறை தேர்தல் மாவட்டங்களில் இதுவரை தமிழரசுக்கட்சியூடாக போட்டியிடும் வேட்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை குறித்த நியமனக்குழு கூடி அங்கு போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.