தமிழரசுக் கட்சி மரணிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அதை இனி ஒருபோதும் உயிர்ப்பிக்க முடியாது என ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -
தமிழரசுக் கட்சியில் தற்போது எவரும் நிலையாக இருக்க விரும்பமாட்டார்கள். குறிப்பாக அங்கு பெண்கள் மதிக்கப்படுவதில்லை. தேர்தலிலும் முக்கிய இடம் கொடுப்பதில்லை.
அதேநேரம் தமது கட்சியை உடைக்க சதி செய்யப்படுகின்றது என்று கூறும் தற்போதைய பதில் தலைவர் சிவஞானம். கட்சிக்குள்ளேயே அதை தேடவேண்டும். அதைவிடுத்து வெளியில் இவ்வாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது.
குறிப்பாக பதவிக்கும், அதிகாரங்களுக்கும், குற்றங்களை மறைக்கும் கும்பலே அந்த கட்சியில் தற்போது இருக்கின்றனர்.
அத்தகைய நிலையில் இருக்கும் கட்சிக்கு யார் தலைவராக இருந்தாலும் பொம்மைகளாகவே இருப்பர்.
இவ்வாறான போக்கு தொடரும் நிலையிலேயே அந்த கட்சியின் உறுப்புரிமையை விலக்கிக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.
இந்த இணைவின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றங்களை கொண்டுவர நாம் முயற்சிக்கின்றோம்.
அந்த வகையில் பெண்களின் வலிமையை வெளிக்கொண்டுவரும் சந்தர்பமாக வரும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை பெண்கள் பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி மரணிக்கும் நிலைக்கு வந்துவிட்டது; அதை இனி ஒருபோதும் உயிர்ப்பிக்க முடியாது விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தமிழரசுக் கட்சி மரணிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. அதை இனி ஒருபோதும் உயிர்ப்பிக்க முடியாது என ஜனநாயக தமிழரசு கட்சியின் பிரமுகர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -தமிழரசுக் கட்சியில் தற்போது எவரும் நிலையாக இருக்க விரும்பமாட்டார்கள். குறிப்பாக அங்கு பெண்கள் மதிக்கப்படுவதில்லை. தேர்தலிலும் முக்கிய இடம் கொடுப்பதில்லை. அதேநேரம் தமது கட்சியை உடைக்க சதி செய்யப்படுகின்றது என்று கூறும் தற்போதைய பதில் தலைவர் சிவஞானம். கட்சிக்குள்ளேயே அதை தேடவேண்டும். அதைவிடுத்து வெளியில் இவ்வாறு கூறுவது வேடிக்கையாக உள்ளது.குறிப்பாக பதவிக்கும், அதிகாரங்களுக்கும், குற்றங்களை மறைக்கும் கும்பலே அந்த கட்சியில் தற்போது இருக்கின்றனர்.அத்தகைய நிலையில் இருக்கும் கட்சிக்கு யார் தலைவராக இருந்தாலும் பொம்மைகளாகவே இருப்பர்.இவ்வாறான போக்கு தொடரும் நிலையிலேயே அந்த கட்சியின் உறுப்புரிமையை விலக்கிக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இந்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.இந்த இணைவின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் போக்கில் மாற்றங்களை கொண்டுவர நாம் முயற்சிக்கின்றோம்.அந்த வகையில் பெண்களின் வலிமையை வெளிக்கொண்டுவரும் சந்தர்பமாக வரும் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலை பெண்கள் பார்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.