• Mar 15 2025

பிரதமர் மற்றும் ITC நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

Chithra / Mar 15th 2025, 2:43 pm
image

 

சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், 

டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன கட்டமைப்பின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) விரிந்த பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்தல், பொருளாதாரத்தில் இளைஞர் சமூகம் மற்றும் பெண்களின் அதிக பங்கேற்பு மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முதலீட்டு நட்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. 

சேதன பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு சர்வதேச வர்த்தக மையம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) உடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது. 


பிரதமர் மற்றும் ITC நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு  சர்வதேச வர்த்தக மையத்தின் (ITC) நிறைவேற்றுப் பணிப்பாளர் பமீலா ரோஸ்மேரி கோக்-ஹமில்டன் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பில், டிஜிட்டல் பரிவர்த்தனை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் அபிவிருத்தி மற்றும் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் உள்ளிட்ட முக்கிய பொருளாதார முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், டிஜிட்டல் மயமாக்கல், சந்தை அணுகலை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன கட்டமைப்பின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) விரிந்த பொருளாதாரத்தில் ஒருங்கிணைத்தல், பொருளாதாரத்தில் இளைஞர் சமூகம் மற்றும் பெண்களின் அதிக பங்கேற்பு மற்றும் நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த முதலீட்டு நட்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. சேதன பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு சர்வதேச வர்த்தக மையம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) உடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவதன் அவசியம் குறித்தும் ஆராயப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement