• Sep 12 2025

கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து; டிப்பர் சாரதியை மடக்கிப்பிடித்த மக்கள்! மாணவன் காயம்

Chithra / Sep 12th 2025, 4:31 pm
image

கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிசெல்ல முற்பட்ட டிப்பர் சாரதியை வீதியால் சென்ற பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏ9 வீதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. 

இன்று நண்பகல் பாடசாலையிருந்து பிள்ளையை ஏற்றி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் பரந்தன் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. 

மோட்டார் சைக்கிள் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன சாரதி  தப்பி செல்ல முற்பட்ட வேளையில் வீதியால் சென்ற பொதுமக்கள்  சாரதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


கிளிநொச்சி ஏ9 வீதியில் விபத்து; டிப்பர் சாரதியை மடக்கிப்பிடித்த மக்கள் மாணவன் காயம் கிளிநொச்சியில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிசெல்ல முற்பட்ட டிப்பர் சாரதியை வீதியால் சென்ற பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏ9 வீதியில் இச் சம்பவம் இடம்பெற்றது. இன்று நண்பகல் பாடசாலையிருந்து பிள்ளையை ஏற்றி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் பரந்தன் இருந்து வவுனியா நோக்கி சென்ற டிப்பர் வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டது. மோட்டார் சைக்கிள் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர் காயங்களுடன் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.விபத்தை ஏற்படுத்திய டிப்பர் வாகன சாரதி  தப்பி செல்ல முற்பட்ட வேளையில் வீதியால் சென்ற பொதுமக்கள்  சாரதியை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement