• Apr 17 2026

அமெரிக்கக் கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகிய இத்தாலி!

Ziya / Mar 14th 2026, 12:23 pm
image

ஈரான் மீதான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகளிலிருந்து இத்தாலி விலகுவதாக அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மெலோனி, தனது நாட்டின் வெளியுறவு மற்றும் ராணுவக் கொள்கையில் எடுத்துள்ள முக்கியமான முடிவுகளை வெளியிட்டார்.

அவர் கூறுகையில்,

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி எந்த ஆதரவும் வழங்காது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள இத்தாலியப் படைகள் அனைத்தும் உடனடியாகத் தாய்நாட்டிற்குத் திரும்பப் பெறப்படும்.

மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒரு போதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் 14 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்து வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஐரோப்பியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாலும் இத்தாலி இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

 G7 நாடுகளில் ஒன்றான இத்தாலியின் இந்த விலகல், அதிபர் டொனால்ட் டிரம்பின்க் சர்வதேச கூட்டணிக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கக் கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகிய இத்தாலி ஈரான் மீதான போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், கூட்டு ராணுவ நடவடிக்கைகளிலிருந்து இத்தாலி விலகுவதாக அந்த நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அதிரடியாக அறிவித்துள்ளார்.இத்தாலி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மெலோனி, தனது நாட்டின் வெளியுறவு மற்றும் ராணுவக் கொள்கையில் எடுத்துள்ள முக்கியமான முடிவுகளை வெளியிட்டார்.அவர் கூறுகையில்,ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி எந்த ஆதரவும் வழங்காது.மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள இத்தாலியப் படைகள் அனைத்தும் உடனடியாகத் தாய்நாட்டிற்குத் திரும்பப் பெறப்படும்.மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒரு போதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் அவர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.போர் 14 நாட்களைக் கடந்தும் தீவிரமடைந்து வருவதாலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஐரோப்பியப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாலும் இத்தாலி இந்த முடிவு எடுத்திருக்கலாம் எனத் தெரிகிறது. G7 நாடுகளில் ஒன்றான இத்தாலியின் இந்த விலகல், அதிபர் டொனால்ட் டிரம்பின்க் சர்வதேச கூட்டணிக்கு விழுந்த பலத்த அடியாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement