• Sep 08 2024

டுபாயில் சாதனை புரிந்த யாழ் சிறுவன் - குவியும் பாராட்டுகள்..!!

Tamil nila / Feb 25th 2024, 10:37 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் - அபுதாபியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 


இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

டுபாய் அபுதாபியில் கடந்த 15ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சர்வதேச ரீதியாக நாடுகளைச் சேர்ந்த 15 கழகங்கள் பங்குபற்றின. 



அதில் இலங்கையில் இருந்து குறித்த போட்டியில் பங்குபற்றிய கழகத்தில் யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்பவரே மாத்திரம் தமிழராவார்.



குறித்த போட்டியில் இவர் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. 

அத்துடன் அங்கு நடைபெற்ற பந்து கட்டுப்பாட்டு (ball control) போட்டியில் கலந்து கொண்டு, கீழே பந்தை விழ விடாமல் ஆயிரம் தடவைகள் கட்டுப்படுத்தி முதலாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் இலண்டன் காற்பந்து வீரரான ரூபென் டியாஸ் அவர்கள் தனது கையெழுத்திட்ட T-shirt ஒன்றினை இவருக்கு பரிசாக வழங்கினார். இந்நிலையில் குறித்த சிறுவன் நேற்று முன்தினம் சாதனை வீரனாக தாயகம் திரும்பியுள்ளார்.

டுபாயில் சாதனை புரிந்த யாழ் சிறுவன் - குவியும் பாராட்டுகள். யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்ற 16 வயதுச் சிறுவன் டுபாய் - அபுதாபியில் இரண்டு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் இளவாலை ஹென்றியரசர் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.டுபாய் அபுதாபியில் கடந்த 15ஆம் திகதி சர்வதேச ரீதியிலான உதைபந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் சர்வதேச ரீதியாக நாடுகளைச் சேர்ந்த 15 கழகங்கள் பங்குபற்றின. அதில் இலங்கையில் இருந்து குறித்த போட்டியில் பங்குபற்றிய கழகத்தில் யாழ்ப்பாணம் - சேந்தாங்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் டேவிட் டாலின்சன் என்பவரே மாத்திரம் தமிழராவார்.குறித்த போட்டியில் இவர் பிரதிநிதித்துவப் படுத்திய இலங்கை அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது. அத்துடன் அங்கு நடைபெற்ற பந்து கட்டுப்பாட்டு (ball control) போட்டியில் கலந்து கொண்டு, கீழே பந்தை விழ விடாமல் ஆயிரம் தடவைகள் கட்டுப்படுத்தி முதலாவது இடத்தையும் பெற்றுள்ளார். இந்நிலையில் இலண்டன் காற்பந்து வீரரான ரூபென் டியாஸ் அவர்கள் தனது கையெழுத்திட்ட T-shirt ஒன்றினை இவருக்கு பரிசாக வழங்கினார். இந்நிலையில் குறித்த சிறுவன் நேற்று முன்தினம் சாதனை வீரனாக தாயகம் திரும்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement