• Sep 20 2024

ஐஸ் போதை வேட்டை நிலமாக யாழ் மாவட்டம் காணப்படுகின்றது -சந்திரசேகரன் கவலை!

Tamil nila / Dec 25th 2022, 10:35 pm
image

Advertisement

இலங்கையில் நத்தார் தினம் என்பது உண்மையில் ஒரு கவலைகாரமான நாளாக மாறியிருக்கிறது .நாட்டினுடைய பொருள் விலை அதிகரிப்பு, பொருளாதார,சமூக,அரசியல் ,கலாசார என்பன ரீதியாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற ஆண்டாகவே இந்த ஆண்டு இருக்கிறது.


தேசிய மக்கள் சக்தி இன்று நாட்டில் பலமான அரசியல் அமைப்பாக மாறி வருகிறது.தென்னிலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களின் வாயில்களிலும் உச்சரிக்கின்ற வார்த்தை வேறெதுவுமில்லை இந்த மக்கள் தேசிய சக்தியாகும் ,அத்துடன் எதிர்காலத்தில் நாட்டில் மாற்றத்தினை கொண்டு வருகின்ற ஒரு சக்தியும் தேசிய மக்கள் சக்தியாகும்.என்று மக்களால் சொல்லல்ப்படுகின்ற அளவிற்கு நிலைமை தோன்றியிருக்கிறது.


இதனால் எங்களுக்கு பாரிய பொறுப்பு,கடைமைகள் இருக்கின்றன.யாழ்ப்பாணத்தில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்கள் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது அதனால் ஏற்பட்ட காயங்கள்,வடுக்கள் ஆற்றப்பட வேண்டிய தேவைகள் இருந்த போதிலும் இன்றுவரை வடுக்கள் தீரா புண்ணுடன் இருக்கின்ற நிலைமையே ஏற்பட்டிருக்கின்றன.


யுத்தத்தின் போது இருந்த கலாசார ரீதியான மாற்றங்கள் இன்று அனைத்தும் சிதைவடைந்து காணப்படுகின்றன.அந்த சிதைவுகளின் அடிப்படையில் இருந்து பார்க்கின்ற பொழுது போதைப்பொரு அதிகரிப்பு,வாள்வெட்டு ,மது பாவனை ,ஐஸ் போதை என வேட்டை நிலமாக இந்த போதைக்கார்கள் பயன்படுத்துகின்ற ஒரு இடமாக தேடிப்பார்க்கின்ற பொழுது அது யாழ்ப்பாணமாக இருக்கின்றது.


யாழ்ப்பணத்தில் வாழுகின்ற மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளுக்காக இவர்களை பகடைக் காயாக பயன்படுத்துகின்ற போக்கே காணக்கூடியதாக இருக்கின்றது.


1978 ஆண்டிற்கு பிறகு தேசிய பிரச்சினை உக்கிரமடைந்தது.அப்போது இனக்கலவரம்,பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர்கள்,1981 ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் மோசடி ,யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யாருமில்லை இந்த சஜித்,ரணில் ஆக்கிரவரின் அப்பன்மார்கள் ஆவர் .அத்துடன் ஜூலை இனக்கலவரத்தினை நிர்மாணித்தவர்கள்.


எங்களின் இளைஞர்களை ஆயுத போராட்டத்திற்கு தள்ளிய ,தொடர்ச்சியாக இனவாதங்கள்,இனக்கலவரங்கள் ,மத வாதங்களை தூண்டி விட்ட என அனைத்திற்கும் தூண்டுகோளாக இருந்தவர்களோடு இன்று 45 வருடங்களாக ரணில் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறார்.இந்த 45 வருடங்களில் ஒன்றுமே புடுங்க முடியாத இந்த  ரணில் விக்கிரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்.


இந்த பேச்சுவார்த்தை என்பது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற  கபட நாடகமே தவிர வேறெதுவுமே கிடையாது.மேற்குலக நாடுகளின் செல்லப்பிள்ளையாக,நாய்க்குட்டியாக் இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவால் குறைந்த பட்ஷம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் அல்ல,பொதுவாக மக்கள் முகனிகொடுக்கின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு எந்தவிதமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்க முடியாத இவர்கள் எங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க போகின்றார்களா?


பாடசாலை மாணவர்கள் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது .பாடசாலை மாணவர்களை இன்று போதைப்பொருள் வியாபாரிகளாக மாற்றி அவர்களை வேட்டையாடுகின்ற ,உள ரீதியாக தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பாவித்தனமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.


இந்த நாட்டில் இருக்கின்ற அமைச்சர்கள்,ஜனாதிபதி,ஆலோசகர்கள் ஆகியோரின் நாய் வேலைகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது இலங்கையில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய நாய்க்குடிகளைக்கூட பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நிலைமைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.இதுவரைகாலமும் இந்த நாட்டினை நாசம் செய்த அரசியல்வாதிகளுக்கு பின்னால் ஓடியது போதும்.அதை நிறுத்தி விட்டு எதிர்வரும் காலங்களிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரதிநிதிதத்துவம் செய்வதற்கு  ஏதுவான நடவடிக்கைகள் எடுங்கள் என்று தமிழ் மக்களையும்,தமிழ் அரசியல்வாதிகளை கேட்டுக்கொள்கிறோம்.

ஐஸ் போதை வேட்டை நிலமாக யாழ் மாவட்டம் காணப்படுகின்றது -சந்திரசேகரன் கவலை இலங்கையில் நத்தார் தினம் என்பது உண்மையில் ஒரு கவலைகாரமான நாளாக மாறியிருக்கிறது .நாட்டினுடைய பொருள் விலை அதிகரிப்பு, பொருளாதார,சமூக,அரசியல் ,கலாசார என்பன ரீதியாக மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்குகின்ற ஆண்டாகவே இந்த ஆண்டு இருக்கிறது.தேசிய மக்கள் சக்தி இன்று நாட்டில் பலமான அரசியல் அமைப்பாக மாறி வருகிறது.தென்னிலங்கையில் வாழுகின்ற அனைத்து மக்களின் வாயில்களிலும் உச்சரிக்கின்ற வார்த்தை வேறெதுவுமில்லை இந்த மக்கள் தேசிய சக்தியாகும் ,அத்துடன் எதிர்காலத்தில் நாட்டில் மாற்றத்தினை கொண்டு வருகின்ற ஒரு சக்தியும் தேசிய மக்கள் சக்தியாகும்.என்று மக்களால் சொல்லல்ப்படுகின்ற அளவிற்கு நிலைமை தோன்றியிருக்கிறது.இதனால் எங்களுக்கு பாரிய பொறுப்பு,கடைமைகள் இருக்கின்றன.யாழ்ப்பாணத்தில் எங்களுடைய செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம்.யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மக்கள் கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தின் போது அதனால் ஏற்பட்ட காயங்கள்,வடுக்கள் ஆற்றப்பட வேண்டிய தேவைகள் இருந்த போதிலும் இன்றுவரை வடுக்கள் தீரா புண்ணுடன் இருக்கின்ற நிலைமையே ஏற்பட்டிருக்கின்றன.யுத்தத்தின் போது இருந்த கலாசார ரீதியான மாற்றங்கள் இன்று அனைத்தும் சிதைவடைந்து காணப்படுகின்றன.அந்த சிதைவுகளின் அடிப்படையில் இருந்து பார்க்கின்ற பொழுது போதைப்பொரு அதிகரிப்பு,வாள்வெட்டு ,மது பாவனை ,ஐஸ் போதை என வேட்டை நிலமாக இந்த போதைக்கார்கள் பயன்படுத்துகின்ற ஒரு இடமாக தேடிப்பார்க்கின்ற பொழுது அது யாழ்ப்பாணமாக இருக்கின்றது.யாழ்ப்பணத்தில் வாழுகின்ற மக்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலக்குகளுக்காக இவர்களை பகடைக் காயாக பயன்படுத்துகின்ற போக்கே காணக்கூடியதாக இருக்கின்றது.1978 ஆண்டிற்கு பிறகு தேசிய பிரச்சினை உக்கிரமடைந்தது.அப்போது இனக்கலவரம்,பயங்கரவாத தடைச் சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தவர்கள்,1981 ஆண்டு மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் மோசடி ,யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யாருமில்லை இந்த சஜித்,ரணில் ஆக்கிரவரின் அப்பன்மார்கள் ஆவர் .அத்துடன் ஜூலை இனக்கலவரத்தினை நிர்மாணித்தவர்கள்.எங்களின் இளைஞர்களை ஆயுத போராட்டத்திற்கு தள்ளிய ,தொடர்ச்சியாக இனவாதங்கள்,இனக்கலவரங்கள் ,மத வாதங்களை தூண்டி விட்ட என அனைத்திற்கும் தூண்டுகோளாக இருந்தவர்களோடு இன்று 45 வருடங்களாக ரணில் பாராளுமன்றத்தில் இருந்திருக்கிறார்.இந்த 45 வருடங்களில் ஒன்றுமே புடுங்க முடியாத இந்த  ரணில் விக்கிரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்ட நபர்.இந்த பேச்சுவார்த்தை என்பது மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற  கபட நாடகமே தவிர வேறெதுவுமே கிடையாது.மேற்குலக நாடுகளின் செல்லப்பிள்ளையாக,நாய்க்குட்டியாக் இருக்கின்ற ரணில் விக்கிரமசிங்கவால் குறைந்த பட்ஷம் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் அல்ல,பொதுவாக மக்கள் முகனிகொடுக்கின்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு எந்தவிதமான தீர்வுகளும் பெற்றுக்கொடுக்க முடியாத இவர்கள் எங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க போகின்றார்களாபாடசாலை மாணவர்கள் படிக்க இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது .பாடசாலை மாணவர்களை இன்று போதைப்பொருள் வியாபாரிகளாக மாற்றி அவர்களை வேட்டையாடுகின்ற ,உள ரீதியாக தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பாவித்தனமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.இந்த நாட்டில் இருக்கின்ற அமைச்சர்கள்,ஜனாதிபதி,ஆலோசகர்கள் ஆகியோரின் நாய் வேலைகளை நாங்கள் பார்க்கின்ற பொழுது இலங்கையில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய நாய்க்குடிகளைக்கூட பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நிலைமைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.இதுவரைகாலமும் இந்த நாட்டினை நாசம் செய்த அரசியல்வாதிகளுக்கு பின்னால் ஓடியது போதும்.அதை நிறுத்தி விட்டு எதிர்வரும் காலங்களிலாவது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரதிநிதிதத்துவம் செய்வதற்கு  ஏதுவான நடவடிக்கைகள் எடுங்கள் என்று தமிழ் மக்களையும்,தமிழ் அரசியல்வாதிகளை கேட்டுக்கொள்கிறோம்.

Advertisement

Advertisement

Advertisement