• Oct 18 2024

தேசிய ரீதியில் சாதித்த யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம்..! samugammedia

Chithra / May 15th 2023, 3:18 pm
image

Advertisement

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியனாகியுள்ளது.

நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென். பிரிட்ஜெட்ஸ் கான்வென்ட் அணியினை முதல் கால் பாதியில் 4:4 ரீதியிலும், இரண்டாவது கால்பாதியில் 8:8 ரீதியிலும், மூன்றாவது கால்பாதியில்16:10 ரீதியிலும், நான்காவது கால் பாதியில் 26:14 ரீதியிலும் கைப்பற்றி யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இச் சம்பியன் பட்டம் மூலம் இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட 16 வயது பிரிவு போட்டியில் வடமாகாண பாடசாலை ஒன்று பெற்ற முதலாவது சம்பியன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜெபோஷினி கைசிங் ரவீந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் சிறந்த தற்காப்பு வீராங்கனையாக விஜயரூபன் சகானா தெரிவானார்.

யாழ் திருக்குடும்ப கன்னியர் மட கூடைப்பந்தாட்ட அணிக்கு தனுஸ்காந்த் ராஜசோபனா பயிற்றுவிப்பாளரராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


தேசிய ரீதியில் சாதித்த யாழ். திருக்குடும்ப கன்னியர் மடம். samugammedia இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தால் தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட 16 வயதுக்குட்பட்டோருக்கான டிவிசன் சி பிரிவு கூடைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியனாகியுள்ளது.நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென். பிரிட்ஜெட்ஸ் கான்வென்ட் அணியினை முதல் கால் பாதியில் 4:4 ரீதியிலும், இரண்டாவது கால்பாதியில் 8:8 ரீதியிலும், மூன்றாவது கால்பாதியில்16:10 ரீதியிலும், நான்காவது கால் பாதியில் 26:14 ரீதியிலும் கைப்பற்றி யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் சம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இச் சம்பியன் பட்டம் மூலம் இலங்கை கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் நடாத்தப்பட்ட 16 வயது பிரிவு போட்டியில் வடமாகாண பாடசாலை ஒன்று பெற்ற முதலாவது சம்பியன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜெபோஷினி கைசிங் ரவீந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் சிறந்த தற்காப்பு வீராங்கனையாக விஜயரூபன் சகானா தெரிவானார்.யாழ் திருக்குடும்ப கன்னியர் மட கூடைப்பந்தாட்ட அணிக்கு தனுஸ்காந்த் ராஜசோபனா பயிற்றுவிப்பாளரராக கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement