• Sep 20 2024

வடக்கின் உள்ளூராட்சி சபைகளில் யாழ்.மாநகர சபை 26 ஆவது இடத்தில்..!

Chithra / Dec 22nd 2022, 6:06 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் ஆய்வின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாநகர சபை 26 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 

உலக வங்கி நிதியில் வடக்கில் மேற்கொள்ளப்படும் பணிக்காக கடந்த ஆண்டு முதல் வழங்கப்படும் நிதிக்காக உலகவங்கி சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையிலேயே நிதியின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. 

இந்த ஆய்விற்கமைய வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகளும் வெளிப்படைத்தன்மை, மக்களிற்கான சேவை, கணக்கியல் என்பவை புள்ளியிடலில் முக்கியம் பெறுகின்றது. 

இவற்றிற்கு அமைய முதல் 9 இடங்களையும் பெறும் உள்ளூராட்சி சபைகளிற்கும் 35 மில்லியன் ரூபா உதவியும் 10 முதல் 18 வரையான சபைகளிற்கு 28 மில்லியன் ரூபா உதவியும் 19 முதல் 26ஆவது இடங்கள்வரை வரும. 

உள்ளூராட்சி சபைகளிற்கு 21 மில்லியனும் வழங்கப்படும் அதேநேரம் 27 ஆவது இடம் முதல் 34 வது இடம்வரை உள்ள சபைகளிற்கு 14 மில்லியன் ரூபாவும் வழஙகப்படும். 

இந்த தரப்படுத்தல் மூலம் 2022ஆம் ஆண்டு 35 மில்லியன் உதவியை பெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை 2023ஆம் ஆண்டில் 21 மில்லியன் உதவியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். 

இதேநேரம் அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ இன்றி மேற்கொண்ட இவ் ஆய்வின் அடிப்படையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 17  உள்ளூராட்சி சபைகளின் செயல்பாட்டிலும் ஆயிரத்து 200 பணியாளர்களைக் கொண்ட  யாழ்ப்பாணம் மாநகரசை 14ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. 

இதேநேரம் வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகளில் முதலிடம் பிடித்த சபையாக வலி.வடக்கு பிரதேச சபை உள்ளது.

வடக்கின் உள்ளூராட்சி சபைகளில் யாழ்.மாநகர சபை 26 ஆவது இடத்தில். வடக்கு மாகாணத்தில் உலக வங்கியின் ஆய்வின் பிரகாரம் யாழ்ப்பாணம் மாநகர சபை 26 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. உலக வங்கி நிதியில் வடக்கில் மேற்கொள்ளப்படும் பணிக்காக கடந்த ஆண்டு முதல் வழங்கப்படும் நிதிக்காக உலகவங்கி சுயாதீனமாக மேற்கொள்ளப்படும் ஆய்வின் அடிப்படையிலேயே நிதியின் அளவு தீர்மானிக்கப்படுகின்றது. இந்த ஆய்விற்கமைய வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகளும் வெளிப்படைத்தன்மை, மக்களிற்கான சேவை, கணக்கியல் என்பவை புள்ளியிடலில் முக்கியம் பெறுகின்றது. இவற்றிற்கு அமைய முதல் 9 இடங்களையும் பெறும் உள்ளூராட்சி சபைகளிற்கும் 35 மில்லியன் ரூபா உதவியும் 10 முதல் 18 வரையான சபைகளிற்கு 28 மில்லியன் ரூபா உதவியும் 19 முதல் 26ஆவது இடங்கள்வரை வரும. உள்ளூராட்சி சபைகளிற்கு 21 மில்லியனும் வழங்கப்படும் அதேநேரம் 27 ஆவது இடம் முதல் 34 வது இடம்வரை உள்ள சபைகளிற்கு 14 மில்லியன் ரூபாவும் வழஙகப்படும். இந்த தரப்படுத்தல் மூலம் 2022ஆம் ஆண்டு 35 மில்லியன் உதவியை பெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை 2023ஆம் ஆண்டில் 21 மில்லியன் உதவியை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இதேநேரம் அரசோ அல்லது அரசியல் கட்சிகளோ இன்றி மேற்கொண்ட இவ் ஆய்வின் அடிப்படையில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 17  உள்ளூராட்சி சபைகளின் செயல்பாட்டிலும் ஆயிரத்து 200 பணியாளர்களைக் கொண்ட  யாழ்ப்பாணம் மாநகரசை 14ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது. இதேநேரம் வடக்கின் 34 உள்ளூராட்சி சபைகளில் முதலிடம் பிடித்த சபையாக வலி.வடக்கு பிரதேச சபை உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement