யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுப்பினர்களுக்கான வட்டார நிதி ஒதுக்கீடுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் வட்டார அபிவிருத்தித் திட்டங்களின் முதலாவது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முதல் நிகழ்வை மாநகர முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்கள் பெரியகடை 14ஆம் வட்டாரத்தில் ஆரம்பித்து வைத்தார்.
பெரியகடை 14ஆம் வட்டாரத்தின் உறுப்பினர் வி.தயாபரன் அவர்களின் முன்மொழிவில் நாவலர் வீதி வடிகால் அமைத்தல் (நாவலர் பாடசாலை முன்றல்) வேலைத்திட்டம் சுமார் 1 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முதல்வர் திருமதி வி. மதிவதனி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி வட்டார அபிவிருத்தி திட்டத்தை போன்று 2026ஆம் ஆண்டுக்கான மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை முதல்வர் தலைமையில் சகல உறுப்பினர்களும் இணைந்து ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட்டார வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வட்டாரத்தின் உறுப்பினர் வி.தயாபரன், மாநகரசபை உறுப்பினர்களான ஜெ.மயூரன், என்.எம்.அப்துல்லாஹ், ஆர்.எப்.றிஸ்லா, எஸ்.சரஸ்வதி, ஆர்.டிலானி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், திட்டத்தின் ஒப்பந்ததாரர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
யாழ். மாநகரசபையின் 2026ஆம் ஆண்டுக்கான வட்டார அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம். யாழ்ப்பாணம் மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உறுப்பினர்களுக்கான வட்டார நிதி ஒதுக்கீடுகளின் கீழ் மேற்கொள்ளப்படும் வட்டார அபிவிருத்தித் திட்டங்களின் முதலாவது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முதல் நிகழ்வை மாநகர முதல்வர் திருமதி வி.மதிவதனி அவர்கள் பெரியகடை 14ஆம் வட்டாரத்தில் ஆரம்பித்து வைத்தார்.பெரியகடை 14ஆம் வட்டாரத்தின் உறுப்பினர் வி.தயாபரன் அவர்களின் முன்மொழிவில் நாவலர் வீதி வடிகால் அமைத்தல் (நாவலர் பாடசாலை முன்றல்) வேலைத்திட்டம் சுமார் 1 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முதல்வர் திருமதி வி. மதிவதனி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி வட்டார அபிவிருத்தி திட்டத்தை போன்று 2026ஆம் ஆண்டுக்கான மாநகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை முதல்வர் தலைமையில் சகல உறுப்பினர்களும் இணைந்து ஆரம்பித்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.வட்டார வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் வட்டாரத்தின் உறுப்பினர் வி.தயாபரன், மாநகரசபை உறுப்பினர்களான ஜெ.மயூரன், என்.எம்.அப்துல்லாஹ், ஆர்.எப்.றிஸ்லா, எஸ்.சரஸ்வதி, ஆர்.டிலானி, தொழில்நுட்ப உத்தியோகத்தர், திட்டத்தின் ஒப்பந்ததாரர், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.