யாழ்ப்பாணம் - நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது.
குறித்த நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையானது நோயாளர்களால் நிரம்பி வழிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நடப்பாண்டின் முதல் பதினைந்து நாட்களுக்குள், அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது (5,029) டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், மேல் மாகாணத்தில் ஆயிரத்து எழுநூறு (1,700) நோயாளர்களும், வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (1,194) நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மேலும், இலங்கையில் பத்து மாவட்டங்களில் அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அதிகளவான நோயாளர்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.நல்லுார் அரசடி பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி டெங்கு நோயால் உயிரிழப்பு. யாழ்ப்பாணம் - நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவி டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு பரிதாபகரமாக பலியாகியுள்ளார். யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது. குறித்த நோய் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையானது நோயாளர்களால் நிரம்பி வழிகின்றமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை இலங்கையில் டெங்கு நோய்த்தொற்று சடுதியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி, நடப்பாண்டின் முதல் பதினைந்து நாட்களுக்குள், அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஐந்தாயிரத்து இருபத்தி ஒன்பது (5,029) டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், மேல் மாகாணத்தில் ஆயிரத்து எழுநூறு (1,700) நோயாளர்களும், வட மாகாணத்தில் ஆயிரத்து நூற்று தொண்ணூற்று நான்கு (1,194) நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.மேலும், இலங்கையில் பத்து மாவட்டங்களில் அறுபத்தேழு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதில் அதிகளவான நோயாளர்களைக் கொண்ட மாகாணமாக மேல் மாகாணம் விளங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் ஒருவார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.