வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாடசாலை மாணவன் ஒருவனை பொலிஸார் கைது செய்தனர்.
அதனை தொடர்ந்து, மாணவனிடம் விசாரணை நடத்தியபோது, வழிப்பறி மற்றும் கொள்ளை என ஐந்துக்கும் மேற்பட்ட குற்றங்களில் மாணவன் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, மாணவனை யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, 6 மாத காலத்துக்கு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான பாடசாலை மாணவனை புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாடசாலை மாணவன் ஒருவனை பொலிஸார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து, மாணவனிடம் விசாரணை நடத்தியபோது, வழிப்பறி மற்றும் கொள்ளை என ஐந்துக்கும் மேற்பட்ட குற்றங்களில் மாணவன் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, மாணவனை யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, 6 மாத காலத்துக்கு புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.