• Oct 30 2024

கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டி- சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ். பெண்!

Tamil nila / Oct 18th 2024, 9:04 pm
image

Advertisement

இன்றையதினம் கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.

APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் வருடாவருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை. அந்தவகையில் இந்த போட்டியானது இந்த வருடம் கம்போடியாவில் நடைபெற்றது.

எல்லாமாக 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.

அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை - யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டி- சர்வதேச நாடுகளை தோற்கடித்து மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட யாழ். பெண் இன்றையதினம் கம்போடியாவில் நடைபெற்ற மணப்பெண் அலங்கார போட்டியில் 19 நாடுகளுடன் போட்டியிட்டு, யாழ்ப்பாணத்தை சேர்ந்த அனித்தா விநயகாந்தன் அவர்கள் மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.APHCA Cambodia Hair , Make up & Beauty Olympics 2024 போட்டிகள் வருடாவருடம் ஒவ்வொரு நாட்டிலும் நடைபெறுவது வழமை. அந்தவகையில் இந்த போட்டியானது இந்த வருடம் கம்போடியாவில் நடைபெற்றது.எல்லாமாக 19 நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள். அந்த வகையில் இலங்கையைச் சேர்ந்த 7 போட்டியாளர்கள் பங்கு பற்றினார்கள்.அங்கு நடைபெற்ற மணப்பெண் அலங்காரப் போட்டியில் இலங்கை - யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையைச் சேர்ந்த அனித்தா விநயகாந்தன் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.இவ்வாறு வெற்றியீட்டிய பெண்மணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement