• Sep 25 2024

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதவுக்கு ஜெய்சங்கர் வாழ்த்து!

Chithra / Sep 25th 2024, 11:59 am
image

Advertisement

 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்தியா-இலங்கை நாகரிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நெருக்கமான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் ஜெய்சங்கர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

1968ஆம் ஆண்டு பிறந்த விஜித ஹேரத், 2000ஆம் ஆண்டில் இருந்து கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

தற்போது அவர், வெளிவிவகாரத்துக்கு மேலதிகமாக, புத்த சாசன மற்றும் மத விவகாரம், ஊடகம் உட்பட்ட துறைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டுக்காலத்தில் கலாசார அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதவுக்கு ஜெய்சங்கர் வாழ்த்து  இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதன்போது, இந்தியா-இலங்கை நாகரிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கு இடையே பாரம்பரியமாக நெருக்கமான நட்புறவை வலுப்படுத்துவதற்கும் ஜெய்சங்கர் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.1968ஆம் ஆண்டு பிறந்த விஜித ஹேரத், 2000ஆம் ஆண்டில் இருந்து கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.தற்போது அவர், வெளிவிவகாரத்துக்கு மேலதிகமாக, புத்த சாசன மற்றும் மத விவகாரம், ஊடகம் உட்பட்ட துறைகளுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.2004 ஆம் ஆண்டுக்காலத்தில் கலாசார அமைச்சராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement