• May 01 2025

ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

Tharun / May 13th 2024, 6:04 pm
image

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, ஜூலை 10-ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

மே 2003 இல், ஆண்டர்சன் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.

தனது முகநூல் கணக்கில் பிரியாவிடை குறிப்பில், ஆண்டர்சன் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

41 வயதான ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.இதனை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.அதன்படி, ஜூலை 10-ம் திகதி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.மே 2003 இல், ஆண்டர்சன் 700 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.தனது முகநூல் கணக்கில் பிரியாவிடை குறிப்பில், ஆண்டர்சன் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 ஆண்டுகளில் தனக்கு உறுதுணையாக இருந்த அனைத்து பயிற்சியாளர்கள், வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும், விளையாட்டு ரசிகர்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.41 வயதான ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஜேம்ஸ் ஆண்டர்சன் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 269 விக்கெட்டுகளையும், 19 டி20 போட்டிகளில் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now