• Jun 06 2026

கடற்றொழில் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜப்பான் இணக்கம்;அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஜப்பானிய விஜயத்தில் பாரிய வெற்றி!

Ziya / Jun 6th 2026, 2:57 pm
image

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம்

மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள்,

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகளுடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக இலங்கையின் கடற்றொழில் துறையில் புதியதொரு

சகாப்தம் ஆரம்பமாகியுள்ளது.


இந்த விஜயத்தின் போது எட்டப்பட்ட முக்கிய இணக்கப்பாடுகள் பின்வருமாறு:


1. இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் 


ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எட்டப்பட்டது. இதன்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் அதிநவீன மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு

ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தூதரகம் ஊடாக மிக விரைவில் ஒருங்கிணைக்கப்படும்.


2.  ஜைகா (JICA) நிறுவனத்தின் தொழில்நுட்பப் பங்களிப்பு மற்றும் கிரிந்த துறைமுகத்தீர்வு 


ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹரா ஷொஹெய் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, இலங்கையின் கடற்றொழில் உட்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய ஜைகா தொழில்நுட்பக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக, நீண்டகாலமாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்கு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நிரந்தரத் தீர்வை வழங்க உறுதியளித்துள்ளது. அத்துடன் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட

மீனவர்களுக்கு ஜப்பான் வழங்கிய உடனடி உதவிகளுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார்.


3. நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) ஊடாக கல்வி மற்றும் சுகாதார உதவிகள் 


நிப்போன் பவுண்டேஷனின் தலைவர் யோஹேய் சசகாவா அவர்களுடனான சந்திப்பில், உலக கடல்சார் பல்கலைக்கழகம் (World Maritime University) ஊடாக

இலங்கைக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைகளை விரிவுபடுத்த இணக்கம் காணப்பட்டது. மேலும், வட மாகாணத்திலுள்ள 100 பாடசாலைகளை

மேம்படுத்தல் மற்றும் தொழுநோய் ஒழிப்புத் திட்டங்களுக்கு அச் நிறுவனம் வழங்கிவரும் ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், அரிசி உற்பத்தியில் இலங்கை

தன்னிறைவு காண்பதற்கான புதிய விவசாயத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். திரு. யோஹேய் சசகாவா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்

செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


4. FRA நிறுவனத்துடன் இணைந்து நவீன படகு வடிவமைப்பு மற்றும் ஆய்வு


ஜப்பான் கடற்றொழில் ஆராய்ச்சி மற்றும் கல்வி முகவரகத்தின் (FRA) உயர்மட்ட அதிகாரிகளுடன் கொள்கை அளவிலான முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போது:


  - எரிபொருள் செலவைக் குறைக்கக்கூடிய நவீன படகு வடிவமைப்புகள்.

  - நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட கடல் உணவு உற்பத்தி

    மேம்பாடு.

  - உயிரித் தொழில்நுட்ப (Biotechnology) ஆராய்ச்சிகள். ஆகியவற்றில் ஜப்பானிய

    தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்தத்

    துறைகளில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தருமாறு

    ஜப்பானிய விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.


இலங்கையின் கடற்றொழில் துறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கமும் அதன் முன்னணி நிறுவனங்களும் வழங்கியுள்ள இந்த முழுமையான ஆதரவு ஒரு பெரும் மைல்கல்லாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.


இந்த அனைத்து சந்திப்புகளிலும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.


கடற்றொழில் துறையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த ஜப்பான் இணக்கம்;அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஜப்பானிய விஜயத்தில் பாரிய வெற்றி ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்று வரும் ‘தீவு நாடுகளின் கடல்சார் மாநாட்டில்’ (ISOS) கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம்மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள்,சர்வதேச நிறுவனங்கள் மற்றும் ஆய்வு அமைப்புகளுடன் மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் பலனாக இலங்கையின் கடற்றொழில் துறையில் புதியதொருசகாப்தம் ஆரம்பமாகியுள்ளது.இந்த விஜயத்தின் போது எட்டப்பட்ட முக்கிய இணக்கப்பாடுகள் பின்வருமாறு:1. இலங்கை பட்டதாரிகளுக்கு ஜப்பானில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் ஜப்பானின் விவசாயம், வனவியல் மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் நெமோட்டோ யுகினோரி (Hon. NEMOTO Yukinori) அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எட்டப்பட்டது. இதன்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மீன்வளம் மற்றும் கடல்சார் தொழில்நுட்பப் பீடங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரி இளைஞர், யுவதிகளுக்கு ஜப்பானின் அதிநவீன மீன்பிடி தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதற்குஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தூதரகம் ஊடாக மிக விரைவில் ஒருங்கிணைக்கப்படும்.2.  ஜைகா (JICA) நிறுவனத்தின் தொழில்நுட்பப் பங்களிப்பு மற்றும் கிரிந்த துறைமுகத்தீர்வு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகத்தின் (JICA) சிரேஷ்ட உப தலைவர் ஹரா ஷொஹெய் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது, இலங்கையின் கடற்றொழில் உட்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய ஜைகா தொழில்நுட்பக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக, நீண்டகாலமாகப் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் கிரிந்த மீன்பிடித் துறைமுகத்தின் பிரச்சினைகளுக்குஅறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான நிரந்தரத் தீர்வை வழங்க உறுதியளித்துள்ளது. அத்துடன் ‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்டமீனவர்களுக்கு ஜப்பான் வழங்கிய உடனடி உதவிகளுக்கு அமைச்சர் நன்றியைத் தெரிவித்தார்.3. நிப்போன் பவுண்டேஷன் (The Nippon Foundation) ஊடாக கல்வி மற்றும் சுகாதார உதவிகள் நிப்போன் பவுண்டேஷனின் தலைவர் யோஹேய் சசகாவா அவர்களுடனான சந்திப்பில், உலக கடல்சார் பல்கலைக்கழகம் (World Maritime University) ஊடாகஇலங்கைக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைகளை விரிவுபடுத்த இணக்கம் காணப்பட்டது. மேலும், வட மாகாணத்திலுள்ள 100 பாடசாலைகளைமேம்படுத்தல் மற்றும் தொழுநோய் ஒழிப்புத் திட்டங்களுக்கு அச் நிறுவனம் வழங்கிவரும் ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், அரிசி உற்பத்தியில் இலங்கைதன்னிறைவு காண்பதற்கான புதிய விவசாயத் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடினார். திரு. யோஹேய் சசகாவா அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.4. FRA நிறுவனத்துடன் இணைந்து நவீன படகு வடிவமைப்பு மற்றும் ஆய்வுஜப்பான் கடற்றொழில் ஆராய்ச்சி மற்றும் கல்வி முகவரகத்தின் (FRA) உயர்மட்ட அதிகாரிகளுடன் கொள்கை அளவிலான முதல் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போது:  - எரிபொருள் செலவைக் குறைக்கக்கூடிய நவீன படகு வடிவமைப்புகள்.  - நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட கடல் உணவு உற்பத்தி    மேம்பாடு.  - உயிரித் தொழில்நுட்ப (Biotechnology) ஆராய்ச்சிகள். ஆகியவற்றில் ஜப்பானிய    தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்தத்    துறைகளில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கைக்கு வருகை தருமாறு    ஜப்பானிய விஞ்ஞானிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.இலங்கையின் கடற்றொழில் துறையை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தி, நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கமும் அதன் முன்னணி நிறுவனங்களும் வழங்கியுள்ள இந்த முழுமையான ஆதரவு ஒரு பெரும் மைல்கல்லாகும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.இந்த அனைத்து சந்திப்புகளிலும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் பிவித்துரு ஜனக குமாரசிங்க மற்றும் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement