• Feb 13 2025

ஜோமல் வரிக்கனுக்கு ஐசிசியின் சிறந்த வீரர் விருது!

Tharmini / Feb 12th 2025, 5:04 pm
image

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருதளித்து கௌரவித்து வருகிறது.

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்ய, தலா 3 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.

அந்தவகையில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த  ஜோமல் வரிக்கன் (Jomel Warrican) ,பாக்கிஸ்தானைச் சேர்ந்த  நோமன் அலி மற்றம்  இந்தியாவைச் சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜோமல் வரிக்கன் ஜனவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டிகளில் நேர்த்தியாக இடதுகை சுழல் பந்துகள் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தமைக்காக வரிக்கன் தெரிவு  செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.

இதேவேளை மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை கரீஷ்மா ராம்ஹாரக், அவுதிரேலியாவை சேர்ந்த பெத் மூனி(Beth Mooney), இந்திய வீராங்கனை கொங்காடி திரிஷா இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் அவுஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி, ஜனவரி மாத ஐசிசி சிறந்த வீராங்கனையாக தெரிவு  செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடியதற்காகவும், 4,000 ஓட்டங்களைக்  குவித்து சாதனை படைத்துள்ளதற்காகவும் பெத் மூனியை தேர்வு செய்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

ஜோமல் வரிக்கனுக்கு ஐசிசியின் சிறந்த வீரர் விருது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து விருதளித்து கௌரவித்து வருகிறது.ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்ய, தலா 3 பேர் கொண்ட பரிந்துரை பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது.அந்தவகையில் சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைச் சேர்ந்த  ஜோமல் வரிக்கன் (Jomel Warrican) ,பாக்கிஸ்தானைச் சேர்ந்த  நோமன் அலி மற்றம்  இந்தியாவைச் சேர்ந்த தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றிருந்தனர். இவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஜோமல் வரிக்கன் ஜனவரி மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் – மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டிகளில் நேர்த்தியாக இடதுகை சுழல் பந்துகள் வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தமைக்காக வரிக்கன் தெரிவு  செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி கூறியுள்ளது.இதேவேளை மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை கரீஷ்மா ராம்ஹாரக், அவுதிரேலியாவை சேர்ந்த பெத் மூனி(Beth Mooney), இந்திய வீராங்கனை கொங்காடி திரிஷா இடம் பெற்றிருந்தனர்.இவர்களில் அவுஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி, ஜனவரி மாத ஐசிசி சிறந்த வீராங்கனையாக தெரிவு  செய்யப்பட்டுள்ளார். மகளிர் ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடியதற்காகவும், 4,000 ஓட்டங்களைக்  குவித்து சாதனை படைத்துள்ளதற்காகவும் பெத் மூனியை தேர்வு செய்துள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement