• Nov 24 2024

யாழில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் - சுகாஷ் கண்டனம்!

Chithra / Feb 25th 2024, 10:18 am
image

 பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து, ஒளிப்பதிவுகளை அழித்து அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின்  செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பேனா முனையை ஆயுத முனையால் அடக்க முற்படுவது கோழைத்தனத்தினதும் அடக்குமுறை மனோபாவத்தினதும் வெளிப்பாடே. 

ஜனநாயகத்தின் நான்காவது தூணென வர்ணிக்கப்படும் ஊடகத்துறை மீதான அடக்குமுறை, இலங்கையில் ஜனநாயகம் என்ற கட்டடம் முற்றாகத் தகர்ந்து விட்டதையே மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தி நிற்கின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகும் இத்தருணத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறையானது, சர்வதேசத்திற்குப் பல செய்திகளைப் பட்டவர்த்தனமாக்குகின்றது என்பதை வலியுறுத்துவதோடு, 

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் சுயாதீன செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருகின்றோம். 

அச்சுறுத்தப்பட்ட ஊடக உறவுகளுக்கு எமது ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


யாழில் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் - சுகாஷ் கண்டனம்  பலாலி, வயாவிளானில் ஊடகப் பணிக்காகச் சென்ற ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி, அவர்களின் புகைப்படக் கருவிகளைப் பறித்து, ஒளிப்பதிவுகளை அழித்து அராஜகம் புரிந்த இலங்கைப் படையினரின்  செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,பேனா முனையை ஆயுத முனையால் அடக்க முற்படுவது கோழைத்தனத்தினதும் அடக்குமுறை மனோபாவத்தினதும் வெளிப்பாடே. ஜனநாயகத்தின் நான்காவது தூணென வர்ணிக்கப்படும் ஊடகத்துறை மீதான அடக்குமுறை, இலங்கையில் ஜனநாயகம் என்ற கட்டடம் முற்றாகத் தகர்ந்து விட்டதையே மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தி நிற்கின்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஆரம்பமாகும் இத்தருணத்தில் அரங்கேற்றப்பட்ட வன்முறையானது, சர்வதேசத்திற்குப் பல செய்திகளைப் பட்டவர்த்தனமாக்குகின்றது என்பதை வலியுறுத்துவதோடு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் சுயாதீன செயற்பாட்டையும் உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கோருகின்றோம். அச்சுறுத்தப்பட்ட ஊடக உறவுகளுக்கு எமது ஆதரவுக் கரங்களை நீட்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement