• Feb 21 2025

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்; அமெரிக்காவுக்கு அழைக்குமாறு எழுத்து மூலமாக அறிவிப்போம்! - சரத் வீரசேகர எச்சரிக்கை

Chithra / Feb 14th 2025, 8:19 am
image

 

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.

நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அத்துடன் வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார்.

எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது அமெரிக்க தூதுவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.

ஆகவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.

பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி சங்; அமெரிக்காவுக்கு அழைக்குமாறு எழுத்து மூலமாக அறிவிப்போம் - சரத் வீரசேகர எச்சரிக்கை  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அத்துடன் வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார்.எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது அமெரிக்க தூதுவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.ஆகவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement