முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வசிக்கும் கட்டிடத்தின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமாக அரசாங்கம் செயற்படுவது கவலைக்குரியது என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை.
நேற்று காலை நீர்வடிகாலமைப்பு அதிகார சபையின் சேவையாளர்கள் விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு வருகை தந்தார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தங்கும் கட்டிடம் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை அண்மித்ததாகவே உள்ளது. இந்த கட்டடத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உத்தியோகஸ்த்தர்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது. ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இருந்து தற்போது அந்த கட்டடத்துக்கு மாற்று வழிமுறை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், கடமையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. என்றார்.
மஹிந்தவின் இல்லத்துக்கான நீர் விநியோகம் துண்டிப்பு; அரசின் செயற்பாடு சிறுபிள்ளைத்தனமானது - சாடும் மனோஜ் கமகே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் வசிக்கும் கட்டிடத்தின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைத்தனமாக அரசாங்கம் செயற்படுவது கவலைக்குரியது என மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக வெளியாகிய செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவில்லை.நேற்று காலை நீர்வடிகாலமைப்பு அதிகார சபையின் சேவையாளர்கள் விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்துக்கு வருகை தந்தார்கள்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் தங்கும் கட்டிடம் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டை அண்மித்ததாகவே உள்ளது. இந்த கட்டடத்துக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உத்தியோகஸ்த்தர்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது. ஆகவே மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இருந்து தற்போது அந்த கட்டடத்துக்கு மாற்று வழிமுறை ஊடாக நீர் விநியோகிக்கப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், கடமையில் அமர்த்தப்பட்டுள்ளவர்களை அசௌகரியத்துக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. என்றார்.