• Sep 04 2025

விபத்தில் உயிரிழந்த தந்தை; வலி சுமந்த யாழ். மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

Chithra / Sep 4th 2025, 11:28 am
image


யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்கு பகுதியில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மாணவி பிரசன்னா ரஸ்வீனா புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவி தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்த போது, தந்தை வல்லை வெளியில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

தாயார் ஒரு ஆசிரியராக இருந்த நிலையில், தனது வீட்டில்  மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்துள்ளார். 

வறுமையிலும் தனது மகளை யா /அல்வாய் அம்பாள் வித்தியாலயத்தில் சேர்த்து கல்வி கற்பித்து வந்துள்ளார். 

பாடசாலை, கோட்டம், மாகாண மட்ட போட்டிகளிலும் முதலிடம் பெற்ற பிரசன்னா ரஸ்வீனா தற்போது புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.

குறித்த மாணவி  தாயாருக்கும், பாடசாலைக்கும், அல்வாய் மண்ணுக்கும் பெருமையை தேடித் தந்திருப்பதுடன், தாயாரின் முயற்சியினால்  கஷ்டங்கள் துயரங்களை கடந்து சித்தியடைந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த தந்தை; வலி சுமந்த யாழ். மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை யாழ்ப்பாணம் - வடமராட்சி, அல்வாய் கிழக்கு பகுதியில் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த மாணவி பிரசன்னா ரஸ்வீனா புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவி தாயின் வயிற்றில் ஐந்து மாத கருவாக இருந்த போது, தந்தை வல்லை வெளியில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.தாயார் ஒரு ஆசிரியராக இருந்த நிலையில், தனது வீட்டில்  மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்துள்ளார். வறுமையிலும் தனது மகளை யா /அல்வாய் அம்பாள் வித்தியாலயத்தில் சேர்த்து கல்வி கற்பித்து வந்துள்ளார். பாடசாலை, கோட்டம், மாகாண மட்ட போட்டிகளிலும் முதலிடம் பெற்ற பிரசன்னா ரஸ்வீனா தற்போது புலமைப்பரிசில் பரீட்சையில் 149 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார்.குறித்த மாணவி  தாயாருக்கும், பாடசாலைக்கும், அல்வாய் மண்ணுக்கும் பெருமையை தேடித் தந்திருப்பதுடன், தாயாரின் முயற்சியினால்  கஷ்டங்கள் துயரங்களை கடந்து சித்தியடைந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement