• Sep 04 2025

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை

Chithra / Sep 4th 2025, 8:28 am
image

தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா  தெரிவித்துள்ளார். 

வானிலை தொடர்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில் 

2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழை சராசரியை அண்மித்ததாகவே காணப்படும்.  குறிப்பாக 500 மி.மீ. முதல் 600 மி. மீ. இற்கு  இடைப்பட்ட அளவிலேயே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இவ்வாண்டு 5க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

இதில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றும் தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்களாகவோ அல்லது புயல்களாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

அதேபோன்று டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்ற தாழமுக்கமும் தீவிரமான தாழமுக்கமாக அல்லது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது.  

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் சராசரியை அண்மித்த அல்லது அதற்கு சற்றுக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும்  பெருமளவுக்கு மழை நாட்கள் செறிவான மழைவீழ்ச்சியைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.  

இதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இம்முறையும் காணப்படுகிறது.  

நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு இடையிடையில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்று மழையின்  60 வீதமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  

ஒக்டோபர் மாதம் 20 ம் திகதிக்கு பின்னர் வடகீழ்ப் பருவக்காற்று மழை படிப்படியாக தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்தார். 

இந்நிலையில் இன்று மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

இதேவேளை  இன்று நண்பகல் 12.09 அளவில் ராகம, கிரிந்திவெல, ருவன்வெல்ல, நாவலப்பிட்டி மற்றும் லுணுகல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக வாகரை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை; வடக்கு, கிழக்கில் இன்று முதல் மழை தற்பொழுது வடக்கு, வடமேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி உள்ளதால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு இன்று முதல் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அவ்வப்போதும் மிதமான மழை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா  தெரிவித்துள்ளார். வானிலை தொடர்பில் அவர் வெளியிட்ட அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வடகீழ்ப் பருவக்காற்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று மழை சராசரியை அண்மித்ததாகவே காணப்படும்.  குறிப்பாக 500 மி.மீ. முதல் 600 மி. மீ. இற்கு  இடைப்பட்ட அளவிலேயே மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.இவ்வாண்டு 5க்கு மேற்பட்ட தாழமுக்க நிகழ்வுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  இதில் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியிலும் இறுதிப்பகுதியிலும் தோன்றும் தாழமுக்கங்கள் தீவிர தாழமுக்கங்களாகவோ அல்லது புயல்களாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.அதேபோன்று டிசம்பர் மாதத்தில் தோன்றுகின்ற தாழமுக்கமும் தீவிரமான தாழமுக்கமாக அல்லது புயலாக மாறுவதற்கான வாய்ப்புகளை கொண்டிருக்கின்றது.  இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் சராசரியை அண்மித்த அல்லது அதற்கு சற்றுக் கூடுதலான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும்  பெருமளவுக்கு மழை நாட்கள் செறிவான மழைவீழ்ச்சியைக் கொண்டதாகவே அமைந்திருக்கும்.  இதனால் வெள்ள அனர்த்தத்துக்கான வாய்ப்புகள் இம்முறையும் காணப்படுகிறது.  நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு இடையிடையில் இவ்வாண்டின் வடகீழ்ப் பருவக்காற்று மழையின்  60 வீதமான மழை கிடைப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.  ஒக்டோபர் மாதம் 20 ம் திகதிக்கு பின்னர் வடகீழ்ப் பருவக்காற்று மழை படிப்படியாக தீவிரம் பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதேவேளை  இன்று நண்பகல் 12.09 அளவில் ராகம, கிரிந்திவெல, ருவன்வெல்ல, நாவலப்பிட்டி மற்றும் லுணுகல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சிலாபத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மன்னாரிலிருந்து காங்கேசந்துறை மற்றும் திருகோணமலை ஊடாக வாகரை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement