• Sep 04 2025

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; யாழ்.மாணவன் லக்சயன் சாதனை

Chithra / Sep 4th 2025, 11:17 am
image


2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வௌியிடப்பட்டது.

இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. 

மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர்.

மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 132 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   


தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலிடம்; யாழ்.மாணவன் லக்சயன் சாதனை 2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று வௌியிடப்பட்டது.இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர்.மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 132 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Advertisement

Advertisement

Advertisement