• Sep 04 2025

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ‘வியத்புர’ சலுகைகள் இரத்து

Chithra / Sep 4th 2025, 1:26 pm
image


பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீட்டுத்தொகுதியில் 101 வீட்டு அலகுகளை ஒரு வருட வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு 2022.07.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சலுகை முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கும், 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவிப்பின் சாதாரண மக்களுக்கு குறித்த வீட்டு அலகைக் கொள்வனவு செய்யும் முறை மற்றும் விலைக்கமைய அவர்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ‘வியத்புர’ சலுகைகள் இரத்து பாராளுமன்ற உறுப்பினர்களால் “வியத்புர” வீட்டுத்திட்டத்தில் வீடுகளைக் கொள்வனவு செய்யும் போது வழங்கப்பட்டுள்ள சலுகைகளை நீக்குதலுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.2022.05.09 அன்று நாட்டில் இடம்பெற்ற குழப்பகரமான சூழ்நிலையால் வீடுகளை இழந்த அப்போதிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட வியத்புர வீட்டுத்தொகுதியில் 101 வீட்டு அலகுகளை ஒரு வருட வாடகை அடிப்படையில் வழங்குவதற்கு 2022.07.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், குறித்த வீடுகளை சலுகை முறையில் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குமாறு அப்பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள சலுகை முறையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்வதற்கும், 29 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடன்பாடு தெரிவிப்பின் சாதாரண மக்களுக்கு குறித்த வீட்டு அலகைக் கொள்வனவு செய்யும் முறை மற்றும் விலைக்கமைய அவர்களுக்கும் வீடுகளைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement