எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 18 பேர் காயமடைந்து தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 1000 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்து தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், பேருந்து விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
1000 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கிய பேருந்து; 15 ஆக உயர்ந்த மரணம் பலர் காயம் எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 18 பேர் காயமடைந்து தியத்தலாவை, பதுளை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இறந்தவர்களில் 9 பெண்களும் 6 ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 11 ஆண்களும் 7 பெண்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 05 குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து 1000 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் சிக்கிய பேருந்து தங்காலை நகரசபை பணியாளர்கள் குழுவை ஏற்றிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. பொலிஸார், இராணுவம், விமானப்படை, தீயணைப்புத் திணைக்களம் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து விபத்தில் சிக்கியவர்ளை மீட்டனர். விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், பேருந்து விபத்து நடந்த இடத்தில் இருந்த மோசமான நிலைமைகள் காரணமாக, அந்தக் குழுவை மீட்க பெரும் முயற்சி எடுக்க வேண்டியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், குறித்த பகுதிக்கு பொது மக்களை வேடிக்கை பார்க்க வர வேண்டாம் எனவும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.