எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று (05) இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அங்கிருந்த விளக்குகள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு குழுவினர் இன்றி போராடிய சந்தர்ப்பத்தில் இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும் என வினவிய போது பிரதேச மக்கள் நாங்கள் சென்று மீட்கிறோம் என தைரியமாக தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, கயிறுகளுடன் சென்று பலமணி நேரம் போராடிய மக்கள் சடலங்களை தோளில் சுமந்துக் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்ற இருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிக இருள் சூழ்ந்த பகுதியில் அந்த பகுதி மக்கள் காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜீப் வண்டி சாரதி கைது சடலங்களை தோளில் சுமந்து வந்த மக்கள்; நெகிழ்ச்சி சம்பவம் எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று (05) இரவு பேருந்து ஒன்று சுமார் 1000 அடி பள்ளத்தில் விழுந்து பாரிய விபத்துக்குள்ளானதில், 15 பேர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அங்கிருந்த விளக்குகள் கையடக்க தொலைபேசி வெளிச்சத்தில் மக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.விபத்துக்குள்ளான பேருந்து சுமார் 1000 மீற்றர் வரை பள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டுக் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மீட்பு குழுவினர் இன்றி போராடிய சந்தர்ப்பத்தில் இந்த இரவில் யாரால் சென்று காப்பாற்ற முடியும் என வினவிய போது பிரதேச மக்கள் நாங்கள் சென்று மீட்கிறோம் என தைரியமாக தெரிவித்துள்ளனர்.அதற்கமைய, கயிறுகளுடன் சென்று பலமணி நேரம் போராடிய மக்கள் சடலங்களை தோளில் சுமந்துக் கொண்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற சென்ற இருவரும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதிக இருள் சூழ்ந்த பகுதியில் அந்த பகுதி மக்கள் காப்பாற்ற முன்வந்ததற்கு பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பாக குறித்த ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.