• Sep 05 2025

காணாமல்போன 6,700 பேர் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நிறைவு

Chithra / Sep 5th 2025, 11:28 am
image

 

வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700  பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது.

வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 16,700 என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் வழக்கறிஞர் மகேஷ் கட்டுலந்த  குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில்  வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் வலியுறுத்தினார். 

மேலும் 10,000 வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு திட்டம் நடந்து வருவதாக கட்டுலந்த  மேலும் குறிப்பிட்டுள்ளார்.


காணாமல்போன 6,700 பேர் தொடர்பில் முதற்கட்ட விசாரணை நிறைவு  வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் வழக்குகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளில் 6,700  பேரின் வழக்குகளை காணாமல் போனோர் அலுவலகம் நிறைவு செய்துள்ளது.வலுக்கட்டாயமாக காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கை 16,700 என்றும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் வழக்கறிஞர் மகேஷ் கட்டுலந்த  குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஐந்து ஆண்டுகளில்  வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் தொடர்பான சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் வலியுறுத்தினார். மேலும் 10,000 வலுக்கட்டாயமாக காணாமல் போனோர் குறித்து விசாரிக்க ஒரு சிறப்பு திட்டம் நடந்து வருவதாக கட்டுலந்த  மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement