• Sep 20 2024

பெண்களை களவாக நாடு கடத்தும் ஜே.வி.பி – சபையில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.!samugammedia

Sharmi / Apr 25th 2023, 10:38 am
image

Advertisement

நாட்டிலுள்ள பெண்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கு அடிக்கடி சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாகவும் ஆனால் அதனையும் மீறி பல பெண்கள் பாரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்வதற்கு எத்தணிக்கின்றவர்கள் போலி முகவர்களின் பிடிக்குள் சிக்குவதாகவும் எனினும் அசாரங்கம் இதற்கு நடவடிக்கை எடுத்து அறிவித்தலும் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் மக்களை ஒன்று திரட்டி களவாக வெளிநாட்டிற்கு அனுப்புவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.

இவ்வாறனவர்கள் பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக படகு மூலம் மட்டும் அல்லாமல், விமான நிலையம் ஊடாகவும் போலியான விசாக்கள் மூலமாகவும் இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறு சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை போலி முகவர்கள் முன்னெடுப்பதாகவும் எனவே குறிப்பாக பெண்கள் அவதானமாக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெண்களை களவாக நாடு கடத்தும் ஜே.வி.பி – சபையில் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.samugammedia நாட்டிலுள்ள பெண்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கு அடிக்கடி சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாகவும் ஆனால் அதனையும் மீறி பல பெண்கள் பாரிய சிக்கல்களில் மாட்டிக்கொள்வதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணாயக்கார தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.பொருளாதார நெருக்கடி காரணமாக வெளிநாடு செல்வதற்கு எத்தணிக்கின்றவர்கள் போலி முகவர்களின் பிடிக்குள் சிக்குவதாகவும் எனினும் அசாரங்கம் இதற்கு நடவடிக்கை எடுத்து அறிவித்தலும் விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் மக்களை ஒன்று திரட்டி களவாக வெளிநாட்டிற்கு அனுப்புவதாக அமைச்சர் குற்றம் சுமத்தியிருந்தார்.இவ்வாறனவர்கள் பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக படகு மூலம் மட்டும் அல்லாமல், விமான நிலையம் ஊடாகவும் போலியான விசாக்கள் மூலமாகவும் இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறு சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை போலி முகவர்கள் முன்னெடுப்பதாகவும் எனவே குறிப்பாக பெண்கள் அவதானமாக இருக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement