• Nov 23 2024

கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு...!

Sharmi / May 24th 2024, 10:16 am
image

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்  உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று(24) அதிகாலை நடைபெற்றது.

கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இன்று அதிகாலை சுப முகூர்த்தத்தில் பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள் வள்ளி அம்மன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இன்று அதிகாலை நிலமே முன்னிலையில் கன்னிக்கால் பக்தி பூர்வமாக பாரம்பரிய கலாசார மரபு முறைப்படி நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல் திருவிழா ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 21ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 22ஆம் திகதி காலை மாணிக்க கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன்  நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கதிர்காம கந்தனின் ஆடிவேல் உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்  உற்சவத்தின் பந்தல்கால் நடும் நிகழ்வு இன்று(24) அதிகாலை நடைபெற்றது.கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இன்று அதிகாலை சுப முகூர்த்தத்தில் பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள் வள்ளி அம்மன் ஆலயத்திலிருந்து கதிர்காம கந்தன் ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.இந்நிலையில் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இன்று அதிகாலை நிலமே முன்னிலையில் கன்னிக்கால் பக்தி பூர்வமாக பாரம்பரிய கலாசார மரபு முறைப்படி நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் கதிர்காமம் பெரிய ஆலயத்தில் வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல் திருவிழா ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 21ஆம் திகதி மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 22ஆம் திகதி காலை மாணிக்க கங்கையில் நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன்  நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement