• Nov 25 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...! 92 வது நாளாக தொடரும் போராட்டம்...!

Sharmi / Jun 24th 2024, 11:16 am
image

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 92  நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், 92 ஆவது நாளாகிய இன்று(24)  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை மூடி, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் என கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி  பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவணியாக செல்வதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

 மேலும், கடந்த காலங்களில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்  1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும்  மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இருந்தபோதிலும், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை   ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.






கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம். 92 வது நாளாக தொடரும் போராட்டம். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும்  தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 92  நாட்களாக அமைதி வழியில் போராடி வருகின்றனர். இந்நிலையில், 92 ஆவது நாளாகிய இன்று(24)  கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடி பிரதேச செயலகத்தின் நுழைவாயிலை மூடி, அதிகாரிகளை உள்நுழைய விடாமல் உயர் அதிகாரிகளும் அரசும் எமக்கு தீர்வை தர வேண்டும் என கோசங்களை எழுப்பி வருகின்றனர்.குறித்த  பிரதேச செயலகத்தின் முன்பாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி  பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய  பதாதைகளை தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்று கூடி போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து இருந்தனர்.அதன் தொடர்ச்சியாக 92 ஆவது நாளான இன்றும் அதிகளவான மக்கள்  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி நடை பவணியாக செல்வதுடன் வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபடவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், கடந்த காலங்களில் உதவி மாவட்ட செயலாளர் பிரிவாக செயல்பட்டு வந்த மேற்குறித்த பிரதேச செயலகம்  1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து 1993 ஆண்டு  அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும்  மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.இருந்தபோதிலும், ஒருசில அரசியல்வாதிகள் தொடக்கம் உயர் அதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு  வருவதன் காரணமாக பொது மக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை   ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement