மயக்க மருந்தைப் பயன்படுத்தி சங்கிலியைத் திருட முயன்ற பெண்ணொருவர் சிக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்தச் சம்பவம் ஹட்டன் பிரதேசத்திலுள்ள ஒரு நகைக் கடையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்,
பெண்ணொருவர் நகை எடுப்பவர் போல ஹட்டனிலுள்ள நகைக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் சங்கிலி ஒன்றைக் காட்டுமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார்.
ஊழியரும் சங்கிலியை எடுத்து அந்தப் பெண்ணிற்கு காட்டி விலையை மதித்துக் கூறியுள்ளார். அதன்பின்னர் பெண் தனது பாக்கில் ஒரு கையை பல நிமிடங்களாக வைத்துக்கொண்டு ஊழியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
ஊழியர் சங்கிலியைப் பிடித்தவாறு காட்ட பெண் சங்கிலியை இறுகப்பிடித்து தன்னிடம் தருமாறு கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையில் பேச்சுவார்ததை இடம்பெற்ற வேளை, பாக்கினுள் இருந்த மயக்க மருந்து கொண்டதான ஸ்பிறேயை எடுத்து ஊழியர் முகத்தினுள் அடிக்க முயன்றுள்ளார்.
எனினும் கவனத்தை சிதறவிடாமல் இருந்த ஊழியர் அதனை அவதானித்து பெண்ணின் கையைத் தடுத்து அவரை அடித்துள்ளார்.
அதன்பின்னரும் குறித்த பெண் சங்கிலியைத் திருடிச் செல்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும் ஊழியர் சாகசமாக அவரை மடக்கிப் பிடித்துள்ளார்.
மயக்க மருந்தைப் பயன்படுத்தி சங்கிலியைத் திருட முயற்சி செய்த பெண்ணின் காணொளி இணையத்தில் வெளிவந்து வைரலாகியுள்ளது.
மயக்க மருந்தைப் பயன்படுத்தி நகையைத் திருட முயன்ற பெண்; ஊழியரிடம் வசமாக சிக்கிய காணொளி வைரல் மயக்க மருந்தைப் பயன்படுத்தி சங்கிலியைத் திருட முயன்ற பெண்ணொருவர் சிக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்தச் சம்பவம் ஹட்டன் பிரதேசத்திலுள்ள ஒரு நகைக் கடையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், பெண்ணொருவர் நகை எடுப்பவர் போல ஹட்டனிலுள்ள நகைக் கடைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் சங்கிலி ஒன்றைக் காட்டுமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார். ஊழியரும் சங்கிலியை எடுத்து அந்தப் பெண்ணிற்கு காட்டி விலையை மதித்துக் கூறியுள்ளார். அதன்பின்னர் பெண் தனது பாக்கில் ஒரு கையை பல நிமிடங்களாக வைத்துக்கொண்டு ஊழியரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஊழியர் சங்கிலியைப் பிடித்தவாறு காட்ட பெண் சங்கிலியை இறுகப்பிடித்து தன்னிடம் தருமாறு கூறியுள்ளார். இருவருக்கும் இடையில் பேச்சுவார்ததை இடம்பெற்ற வேளை, பாக்கினுள் இருந்த மயக்க மருந்து கொண்டதான ஸ்பிறேயை எடுத்து ஊழியர் முகத்தினுள் அடிக்க முயன்றுள்ளார். எனினும் கவனத்தை சிதறவிடாமல் இருந்த ஊழியர் அதனை அவதானித்து பெண்ணின் கையைத் தடுத்து அவரை அடித்துள்ளார். அதன்பின்னரும் குறித்த பெண் சங்கிலியைத் திருடிச் செல்வதற்கு முயற்சித்துள்ளார். எனினும் ஊழியர் சாகசமாக அவரை மடக்கிப் பிடித்துள்ளார். மயக்க மருந்தைப் பயன்படுத்தி சங்கிலியைத் திருட முயற்சி செய்த பெண்ணின் காணொளி இணையத்தில் வெளிவந்து வைரலாகியுள்ளது.