• Aug 04 2025

செம்மணி சாட்சியங்களை திரட்டி நீதிமன்றில் சமர்ப்பிக்க தயார் - ஓம்.பி அலுவலகத்தின் சட்டத்தரணி தர்பரன்!

shanuja / Aug 4th 2025, 12:22 pm
image

செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான சாட்சியங்கள் பல்வேறு இடங்களில் உள்ளதாக அறிகின்றோம். அது தொடர்பான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்  தயாராகவுள்ளது என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெகநாதன் தர்பரன் தெரிவித்துள்ளார்.  


நேற்று இடம்பெற்ற செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இன்று (நேற்று) 4 எலும்புக்கூடுகள் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி இன்றும் மொத்தமாக 130 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 117 எலும்புக்கூடுகள் இதுவரையில் நீதிமன்றில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.


இந்த நிலையில் நாளை (இன்று) நடைபெறும் ஸ்கான் பரிசோதனையில்  வெளிவரும் படங்களை முன்வைத்து மீளவும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டுா என்பது குறித்ததான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. 


அத்துடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள தடயப்பொருள்களை வைத்து மேலதிக விவரங்களைத் திரட்டுவதற்கு மக்களும் ஊடகவியலாளர்களும் பெரும் பங்களிப்பை வழங்கினால் மனிதபுதைகுழி விசாரணைக்கு உறுதியாக இருக்கும். 


கண்டெடுக்கப்பட்ட தடயவியல் பொருட்கள் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரிடமோ பொதுமக்களிடடோ ஏதேனும் தகவல் இருந்தால் அதனை சட்ட நீதித்துறைக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் 


செம்மணி மனதிபுதைகுழி தொடர்பான சாட்சியங்கள் பல்வேறு இடங்களில் உள்ளதாக அறிகின்றோம். அது தொடர்பில் நாமும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்  நிச்சயமாக அது தொடர்பான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தயாராக இருக்கும். - என்றார்.

செம்மணி சாட்சியங்களை திரட்டி நீதிமன்றில் சமர்ப்பிக்க தயார் - ஓம்.பி அலுவலகத்தின் சட்டத்தரணி தர்பரன் செம்மணி மனிதபுதைகுழி தொடர்பான சாட்சியங்கள் பல்வேறு இடங்களில் உள்ளதாக அறிகின்றோம். அது தொடர்பான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்  தயாராகவுள்ளது என்று காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் சட்டத்தரணி ஜெகநாதன் தர்பரன் தெரிவித்துள்ளார்.  நேற்று இடம்பெற்ற செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இன்று (நேற்று) 4 எலும்புக்கூடுகள் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி இன்றும் மொத்தமாக 130 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 117 எலும்புக்கூடுகள் இதுவரையில் நீதிமன்றில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில் நாளை (இன்று) நடைபெறும் ஸ்கான் பரிசோதனையில்  வெளிவரும் படங்களை முன்வைத்து மீளவும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டுா என்பது குறித்ததான தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. அத்துடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ள தடயப்பொருள்களை வைத்து மேலதிக விவரங்களைத் திரட்டுவதற்கு மக்களும் ஊடகவியலாளர்களும் பெரும் பங்களிப்பை வழங்கினால் மனிதபுதைகுழி விசாரணைக்கு உறுதியாக இருக்கும். கண்டெடுக்கப்பட்ட தடயவியல் பொருட்கள் தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரிடமோ பொதுமக்களிடடோ ஏதேனும் தகவல் இருந்தால் அதனை சட்ட நீதித்துறைக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் செம்மணி மனதிபுதைகுழி தொடர்பான சாட்சியங்கள் பல்வேறு இடங்களில் உள்ளதாக அறிகின்றோம். அது தொடர்பில் நாமும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்  நிச்சயமாக அது தொடர்பான நபர்களை சந்தித்து தகவல்களைத் திரட்டி நீதிமன்றிற்கு சமர்ப்பிப்பதற்கு தயாராக இருக்கும். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement