• Aug 04 2025

சோமரத்ன ராஜபக்ஷ வழக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் சிக்கலானதாகும்! – சரத் வீரசேகர தெரிவிப்பு

Chithra / Aug 4th 2025, 8:37 am
image

 

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் ஒரு உத்தியாகவே இவ்விடயம் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச கட்டமைப்புக்கு செல்வதற்கு முன்னர் தேசிய நீதிக்கட்டமைப்பை நாடலாம் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. 

சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

தனியார்ஊடமொன்று கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சோமரத்ன ராஜபக்ஷ வழக்கில் ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம் சிக்கலானதாகும் – சரத் வீரசேகர தெரிவிப்பு  கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்துக்கு கொண்டு செல்லும் ஒரு உத்தியாகவே இவ்விடயம் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச கட்டமைப்புக்கு செல்வதற்கு முன்னர் தேசிய நீதிக்கட்டமைப்பை நாடலாம் என்றும் குறிப்பிட்டார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என்றார்.தனியார்ஊடமொன்று கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement