• Aug 04 2025

நாட்டின் சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு

Chithra / Aug 4th 2025, 2:07 pm
image


களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (5) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக  வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, வாத்துவ ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது. 

நீர் வெட்டு காரணமாக நீர் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவிப்பதுடன், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (5) 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை காலை 10 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையான 12 மணித்தியாலங்கள் இவ்வாறு நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக  வடிகாலமைப்பு சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. களுத்துறை நீர் வழங்கல் அமைப்பின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, நாகொட, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, வாத்துவ ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை தெரிவித்துள்ளது. நீர் வெட்டு காரணமாக நீர் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு சபை வருத்தம் தெரிவிப்பதுடன், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மக்களுக்கு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement