புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கூட்டம் கொஸ்வத்தையில் நேற்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலின் பின்னர், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். என தெரிவித்தார்.
தேசியப்பட்டியல் ஊடக நாடாளுமன்றம் வரும் காஞ்சன விஜேசேகர - வெளியான தகவல் புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.புதிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் விசேட கூட்டம் கொஸ்வத்தையில் நேற்று நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலின் பின்னர், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.எனினும் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும். என தெரிவித்தார்.