• Apr 02 2025

திருமலையில் வேளாண்மைச் செய்கை பாதிப்பு- விவசாயிகள் கவலை..!

Sharmi / Dec 5th 2024, 8:44 am
image

திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பூநகர்-வளர்மதி விவசாய சம்மேளனத்தின் கீழ் இம்முறை 2,000 ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைச் செய்கையானது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்களைப் பெற்று வங்கிகளில் அடகுகள் வைத்து பெரும்போக செய்கை மேற்கொண்டபோதிலும் வெள்ள அனர்த்தினால் தமது நெற்செய்கை அழிவடைந்து பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எண்ணெய் விசிறப்பட்டு பசளைகள் விதைத்தும் மழை வெள்ளத்தினால் தமது வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்து விவசாயிகள் நஷ்டமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  வெருகல் -பூநகர் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.



திருமலையில் வேளாண்மைச் செய்கை பாதிப்பு- விவசாயிகள் கவலை. திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பூநகர்-வளர்மதி விவசாய சம்மேளனத்தின் கீழ் இம்முறை 2,000 ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.இதில் சுமார் 800 க்கும் மேற்பட்ட ஏக்கர் வேளாண்மைச் செய்கையானது மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கடன்களைப் பெற்று வங்கிகளில் அடகுகள் வைத்து பெரும்போக செய்கை மேற்கொண்டபோதிலும் வெள்ள அனர்த்தினால் தமது நெற்செய்கை அழிவடைந்து பாதிப்படைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.எண்ணெய் விசிறப்பட்டு பசளைகள் விதைத்தும் மழை வெள்ளத்தினால் தமது வேளாண்மைச் செய்கை பாதிப்படைந்து விவசாயிகள் நஷ்டமடைந்துள்ள நிலையில் அரசாங்கம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  வெருகல் -பூநகர் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement