• Feb 10 2025

இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு!

Chithra / Dec 5th 2024, 8:36 am
image

 

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இயந்திரத் திறனுக்கு ஏற்ப வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கான வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பிரதான வாகன இறக்குமதி நிறுவனங்களின் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.

இந்த விளம்பரங்களினால் சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் அவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பயன்படுத்திய வாகனங்களை விட புதிய இறக்குமதி வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இந்த பத்திரிகை விளம்பரங்களில் வெளியாகும் விலையில் வாகனங்களை வாங்க முடியாது எனவும் வாகன இறக்குமதி வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் வாய்ப்பு  வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை உயர்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இயந்திரத் திறனுக்கு ஏற்ப வரி விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கான வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பிரதான வாகன இறக்குமதி நிறுவனங்களின் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.இந்த விளம்பரங்களினால் சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் அவற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.பயன்படுத்திய வாகனங்களை விட புதிய இறக்குமதி வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த பத்திரிகை விளம்பரங்களில் வெளியாகும் விலையில் வாகனங்களை வாங்க முடியாது எனவும் வாகன இறக்குமதி வரி அதிகரிப்பே இதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement