• Mar 17 2026

விரிசல்கள் விழுந்த வீடுகளுக்குள் மீண்டும் வாழ்க்கையா? பரிதவிக்கும் கம்பளை மக்கள்

Chithra / Jan 6th 2026, 11:42 am
image

  

கம்பளை - குருந்துவத்த சமர்செட் தோட்டத்தில் வசிக்கும் மக்களின் வீடுகள் கடுமையான மண்சரிவால் பாதிக்கப்பட்டதன் காரணமாக, பத்து குடும்பங்கள் கடந்த ஒரு மாதமாக முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.


குருந்துவத்த சமர்செட் தோட்ட மக்களின் வீடுகளின் முன்புறங்களில் பெரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பல வீடுகளில் பெரும் விரிசல்கள் காணப்படுகின்றன. 


இதனால், அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை முகாம்களில் அவர்கள் தற்காலிகமாக தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதுவரை எந்த அரச அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசாங்கம் வழங்க வேண்டிய நிதியுதவிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


முகாம்களில் தங்கியுள்ள மக்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்திய அரச அதிகாரிகள், அதற்குப் பிறகு தேவையான உதவிகள் அல்லது மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். 


இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், முகாம்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் இல்லை எனவும், அரசாங்கம் வழங்க வேண்டிய நிதியுதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.


பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் பாதுகாப்பான மாற்று வசதிகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விரிசல்கள் விழுந்த வீடுகளுக்குள் மீண்டும் வாழ்க்கையா பரிதவிக்கும் கம்பளை மக்கள்   கம்பளை - குருந்துவத்த சமர்செட் தோட்டத்தில் வசிக்கும் மக்களின் வீடுகள் கடுமையான மண்சரிவால் பாதிக்கப்பட்டதன் காரணமாக, பத்து குடும்பங்கள் கடந்த ஒரு மாதமாக முகாம்களில் தங்கியிருப்பதாக தெரிவிக்கின்றனர்.குருந்துவத்த சமர்செட் தோட்ட மக்களின் வீடுகளின் முன்புறங்களில் பெரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதுடன், பல வீடுகளில் பெரும் விரிசல்கள் காணப்படுகின்றன. இதனால், அந்தப் பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலை முகாம்களில் அவர்கள் தற்காலிகமாக தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதுவரை எந்த அரச அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் ஆய்வு மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், அரசாங்கம் வழங்க வேண்டிய நிதியுதவிகள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.முகாம்களில் தங்கியுள்ள மக்களை வீடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்திய அரச அதிகாரிகள், அதற்குப் பிறகு தேவையான உதவிகள் அல்லது மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர். இதனால், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடும் மனஅழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், முகாம்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதுவும் இல்லை எனவும், அரசாங்கம் வழங்க வேண்டிய நிதியுதவிகளும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் பாதுகாப்பான மாற்று வசதிகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement