• Oct 18 2026

சாதனை மாணவர்களுக்கு கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால் கல்வி உதவித்தொகை வழங்கி வைப்பு!

Chithra / Oct 18th 2026, 5:10 pm
image


கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகப் பங்களிப்புச் செய்து வரும் கதிரேசன் விளையாட்டுக் கழகம், அண்மையில் நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது, 2025ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்திருந்தது.


இதன்போது, கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு நல்லாயன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் முகத்துவாரம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும் எனவும் கழகத்தினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.


அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதனை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (17) கொழும்பு, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


இதன்போது, சாதனை படைத்த மாணவ, மாணவியருக்குத் தலா 25,000 ரூபாய் வீதம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.


அத்துடன், எட்டியாந்தோட்டை பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவி ஒருவருக்கு மாதாந்த போக்குவரத்து உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.


கதிரேசன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் நோக்கில் கதிரேசன் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்து வரும் இத்தகைய கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன.

சாதனை மாணவர்களுக்கு கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால் கல்வி உதவித்தொகை வழங்கி வைப்பு கொழும்பு-13, கதிரேசன் வீதியில் இயங்கிவரும் கதிரேசன் விளையாட்டுக் கழகத்தினால், கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.விளையாட்டுத் துறையில் மட்டுமன்றி, கல்வி மற்றும் சமூகச் சேவைகளிலும் தொடர்ச்சியாகப் பங்களிப்புச் செய்து வரும் கதிரேசன் விளையாட்டுக் கழகம், அண்மையில் நடத்திய கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போது, 2025ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்திருந்தது.இதன்போது, கொழும்பு கணபதி இந்து மகளிர் மகா வித்தியாலயம், கொழும்பு நல்லாயன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் முகத்துவாரம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த சாதனை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்படும் எனவும் கழகத்தினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், சாதனை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு நேற்று (17) கொழும்பு, செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதன்போது, சாதனை படைத்த மாணவ, மாணவியருக்குத் தலா 25,000 ரூபாய் வீதம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.அத்துடன், எட்டியாந்தோட்டை பிரதேசத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ள மாணவி ஒருவருக்கு மாதாந்த போக்குவரத்து உதவித்தொகை வழங்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.கதிரேசன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கழகத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கும் நோக்கில் கதிரேசன் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்து வரும் இத்தகைய கல்வி மற்றும் சமூக நலத்திட்டங்கள் பொதுமக்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement