• Jan 11 2025

கிளீன் சிறிலங்கா திட்டம் - 97 பேர் காத்தான்குடி பொலிஸார் கைது

Chithra / Jan 8th 2025, 7:22 am
image


இலங்கை அரசின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நாடுமுழுவதிலும் விசேட தேடுதல் மற்றும் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அந்த அடிப்படையில் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 97  பேர் காத்தான்குடி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட போலீஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர்குறித்த தேடுதல் நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தனர்.

காத்தான்குடி , புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, புதுக்குடியிருப்பு,தாளங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில்  இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது வேகமாக  வாகனம் ஓட்டிய குற்றம் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக 97 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் பல மீட்கப்பட்டன.


கிளீன் சிறிலங்கா திட்டம் - 97 பேர் காத்தான்குடி பொலிஸார் கைது இலங்கை அரசின் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் நாடுமுழுவதிலும் விசேட தேடுதல் மற்றும் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.அந்த அடிப்படையில் குற்றச்செயல்களுடன் தொடர்பு பட்ட 97  பேர் காத்தான்குடி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட போலீஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் பேரில் காத்தான்குடி குற்றத்தடுப்பு பொலிசார் மற்றும் போதை ஒழிப்பு பிரிவினர்குறித்த தேடுதல் நடவடிக்கைகளை காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பிரதேசங்களில் மேற்கொண்டிருந்தனர்.காத்தான்குடி , புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, புதுக்குடியிருப்பு,தாளங்குடா, ஆரையம்பதி உட்பட பல இடங்களில்  இந்த தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.இதன் போது வேகமாக  வாகனம் ஓட்டிய குற்றம் மற்றும் வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக 97 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சட்டவிரோத பொருட்கள் பல மீட்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement