• Oct 21 2024

காத்தான்குடி கொள்ளைச் சம்பவம்: கணவனும் மனைவியும் கைது

Chithra / Oct 21st 2024, 4:07 pm
image

Advertisement

 

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்குச் சென்று விட்டு, மீண்டும் வீட்டை திறந்து பார்த்தபோது குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டிலிருந்த ஏரிஎம் அட்டையை மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள், திருட்டுச் சம்பவம் இடம்பேற்ற இடத்துக்கு சற்று அருகிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு வந்த குறுஞ்செய்தி ஊடாகவே குறித்த சம்பவத்தை அறிய முடிந்துள்ளது.

இந்நிலையில், மேற்படி பல்பொருள் விற்பனை நிலைய சிசிரிவி கமராவை பரிசோதித்த போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

எனினும், வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த நபரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள அதே நேரம் திருடப்பட்ட நகையை நகைக்கடையில் விற்பனை செய்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் பணம் ஏரிஎம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காத்தான்குடி கொள்ளைச் சம்பவம்: கணவனும் மனைவியும் கைது  மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கல்லடி திருச்செந்தூரில் அமைந்துள்ள தனது வீட்டைப் பூட்டிவிட்டு பிறந்தநாள் விழா ஒன்றிற்குச் சென்று விட்டு, மீண்டும் வீட்டை திறந்து பார்த்தபோது குறித்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.குறித்த வீட்டிலிருந்த ஏரிஎம் அட்டையை மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள், திருட்டுச் சம்பவம் இடம்பேற்ற இடத்துக்கு சற்று அருகிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டிருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு வந்த குறுஞ்செய்தி ஊடாகவே குறித்த சம்பவத்தை அறிய முடிந்துள்ளது.இந்நிலையில், மேற்படி பல்பொருள் விற்பனை நிலைய சிசிரிவி கமராவை பரிசோதித்த போது சம்பவத்தில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.எனினும், வீட்டின் மேல் பகுதியில் வாடகைக்கு குடியிருந்த நபரே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள அதே நேரம் திருடப்பட்ட நகையை நகைக்கடையில் விற்பனை செய்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர்களிடமிருந்து ஒரு தங்க மாலை மற்றும் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் பணம் ஏரிஎம் அட்டை என்பன மீட்கப்பட்டுள்ளன.இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதுடன் சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதமான நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement