• Nov 23 2024

பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சி - கட்டுநாயக்கவில் சிக்கிய விமான நிலைய அதிகாரி!

Chithra / Jun 21st 2024, 5:54 pm
image

 கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளை சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான 18 தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவர் மாத்தறை, ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இன்று (21) காலை வருகை முனையத்தின் கழிப்பறையில் வைத்து பயணி ஒருவரிடம் இருந்து தங்க பிஸ்கட்களை பெற்றுள்ளார். இதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 02 கிலோ 86 கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சி - கட்டுநாயக்கவில் சிக்கிய விமான நிலைய அதிகாரி  கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் பெருந்தொகை தங்கத்தை கடத்தும் முயற்சில் ஈடுபட்டிருந்த வேளை சுங்க பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதன்போது சுமார் 48 மில்லியன் ரூபா பெறுமதியான 18 தங்க பிஸ்கட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.விமான நிலையத்தில் 15 வருடங்களாக பணியாற்றும் 40 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாத்தறை, ஹக்மன பிரதேசத்தை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இன்று (21) காலை வருகை முனையத்தின் கழிப்பறையில் வைத்து பயணி ஒருவரிடம் இருந்து தங்க பிஸ்கட்களை பெற்றுள்ளார். இதற்காக ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் 02 கிலோ 86 கிராம் எடையுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement