• Sep 20 2024

கெஹலியவின் மகன் இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை! நீதிமன்றம் உத்தரவு

Chithra / Sep 19th 2024, 1:12 pm
image

Advertisement


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன்  ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் இரண்டு வீடுகளை தலா 80 மில்லியன் ரூபா மற்றும் 65 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த சொத்துக்களை பயன்படுத்த தடை விதித்து  உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு ஆணைக்குழு இன்று நீதிமன்றில் கோரியிருந்தது.

இந்த கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வரும் டிசம்பர் 19ம் திகதி வரை சொத்துக்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

கெஹலியவின் மகன் இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை நீதிமன்றம் உத்தரவு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன்  ரமித் ரம்புக்வெல்லவுக்கு சொந்தமான இரண்டு சொகுசு வீடுகளை பயன்படுத்த தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.ரமித் ரம்புக்வெல்ல கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு வீட்டுத் தொகுதியில் இரண்டு வீடுகளை தலா 80 மில்லியன் ரூபா மற்றும் 65 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.இது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் குறித்த சொத்துக்களை பயன்படுத்த தடை விதித்து  உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு ஆணைக்குழு இன்று நீதிமன்றில் கோரியிருந்தது.இந்த கோரிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வரும் டிசம்பர் 19ம் திகதி வரை சொத்துக்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement