• Apr 13 2025

கிளிநொச்சியில் கெக்கரி வயல் அறுவடை விழா

Chithra / Apr 11th 2025, 4:30 pm
image


கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று கெக்கரி  கண்ணுருவையிட் என்னும் புதிய வகை இனம் முதன்முறையாக தருமபுரம் பகுதி விவசாயி ஒருவரினால் நடுகை செய்யப்பட்டு அதன் அறுவடை விழா இன்று நடைபெற்றது.

குறித்த அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், வி.சோதிலட்சுமி,  பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது விவசாயிகள் தெரிவிக்கையில்,

தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை கெக்கரி இனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் விற்பனை செய்வதில் பெரும் சிரமங்கள் உள்ளதாகவும்,

வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுமாயின் சிறந்த விளைச்சலையும் லாபத்தையும் பெற முடியும் எனவும் தெரிவித்தனர்.

இதற்கமைவாக கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் கூறுகையில்,

பாரியளவில் உற்பத்தி செய்யப்படுமாயின் ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்பினை பெற்று தர முடியும் எனவும் தெரிவித்தார்.


கிளிநொச்சியில் கெக்கரி வயல் அறுவடை விழா கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில்  புளியம்பொக்கனை கமல சேவை பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் இன்று கெக்கரி  கண்ணுருவையிட் என்னும் புதிய வகை இனம் முதன்முறையாக தருமபுரம் பகுதி விவசாயி ஒருவரினால் நடுகை செய்யப்பட்டு அதன் அறுவடை விழா இன்று நடைபெற்றது.குறித்த அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர், வி.சோதிலட்சுமி,  பாடவிதான உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.இதன்போது விவசாயிகள் தெரிவிக்கையில்,தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வகை கெக்கரி இனத்தை கிளிநொச்சி மாவட்டத்தில் விற்பனை செய்வதில் பெரும் சிரமங்கள் உள்ளதாகவும்,வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுமாயின் சிறந்த விளைச்சலையும் லாபத்தையும் பெற முடியும் எனவும் தெரிவித்தனர்.இதற்கமைவாக கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் கூறுகையில்,பாரியளவில் உற்பத்தி செய்யப்படுமாயின் ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்பினை பெற்று தர முடியும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement