• Apr 13 2025

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு வந்த ஹரிணி; பலத்தப்படுத்தப்பட பாதுகாப்பு

Chithra / Apr 11th 2025, 4:17 pm
image


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார்.

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.

பிரதமர் ஆலயத்திற்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்ததிருந்தனர்.

இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஆலய தர்மகர்த்தா சபையினர் முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் ஒரளவு தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு வந்த ஹரிணி; பலத்தப்படுத்தப்பட பாதுகாப்பு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற் கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வாழிபாட்டில் ஈடுபட்டார்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற நிலையில் மதியம் பிரதமர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுப்பட்டார்.பிரதமர் ஆலயத்திற்கு வருகை தர விருந்த நிலையில் அதிகாலை வேளை ஆலய சூழலில், பொலிஸ் விசேட அதிரடி படையினர், பொலிஸார் மற்றும் பிரதமர் பாதுகாப்பு பிரிவினர் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் சோதனையிடப்பட்டு கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்த நிலையில் பலரும் விசனம் தெரிவித்ததிருந்தனர்.இதன் பின்னர் சிறிது நேரத்தில் ஆலய தர்மகர்த்தா சபையினர் முக்கியஸ்தர்களுடன் பேசியதை அடுத்து, பாதுகாப்பு கெடுபிடிகள் ஒரளவு தளர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement